பருத்தி பயிர்களை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்..!

Advertisement

பருத்தி பயிர்களை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்..!

பயிர் பாதுகாப்பு முறைகள் – பருத்தி பயரை தாக்கும் நோய்களும், அதன் அறிகுறிகளும், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பயிர் பாதுகாப்பு முறைகள் – ஃபியூ சேரியம் வாடல் நோய்

ஃபியூ சேரியம் வாடல் நோய். இந்த நோய், பருத்தி பயிர்களை அதிகமாக தாக்கக்கூடிய நோய்களில் ஒன்று. சரி இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் அதாவது பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection) பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க.

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..!

பயிர் பாதுகாப்பு முறைகள் – வாடல் நோய் அறிகுறிகள்

  1. பாதிக்கப்பட்ட இளஞ்செடியின் விதையிலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும்.
  2. நாளடைவில் இளஞ்செடிகள் காய்ந்துவிடும். வளர்ந்த செடியில் நோய் தொற்றினால், அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறி, பின் வாடி உதிர்ந்து விடும்.
  3. தண்டின் அடிப்பகுதி கருமையாகவும், உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிற கோடுகள் காணப்படும்.

பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection):

  1. பயிர் பாதுகாப்பு முறைகள்: அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  2. ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவர குப்பைகளை அகற்றி தீயிடவும்.
  3. பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
  4. அதிகப்படியான தொழுவுரம் 100 டன் /ஏக்கர் இடவும்.
  5. 0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் வேர்களில் ஊற்றி மண்ணை அனைக்கவும்.

வேரழுகல் நோய் :

பருத்தி பயர் பொறுத்தவரை அதிகளவு வேரழுகல் நோய் இருக்கும், எனவே இந்த வேரழுகல் நோயின் அறிகுறிகள், மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

வேரழுகல் நோய் அறிகுறிகள்

  • முளையிடும் நாற்றுக்களின், விதையிலை கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும்.
  • தண்டின் அடிப்பகுதியில் பட்டை, நார் நாராக உரிந்துவிடும்.
  • வேர்பகுதி முழுவதும் சிதைந்து விடும். செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection):

  1. பயிர் பாதுகாப்பு முறைகள் ட்ரைக்கோடெர்மாவிரிடி 4 கிராம் / கிலோ (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  2. கார்பாக்சின் (அ) திரம் 5 கிராம் (அ) கார்பென்டசிம் 2 கிராம் / கிலோ விதை நேர்த்தி செய்யவும்.
  3. 0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.
  4. தொழுவுரம் 10 டன் /ஏக்கர் (அ) வேப்பம் புண்ணாக்கு 2.5 டன் / ஏக்கர் இடவும்.
    ஆரம்ப விதைப்பு (ஏப்ரல் முதல் வாரம்) (அ) தாமத விதைப்பு (ஜீன் கடைசி வாரம்) விதைக்கும் நேரத்தை மாற்றுவதன் மூலம் செடியை அதிக மண் வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கலாம்.
  5. மண் வெப்பநிலையை குறைக்க, சோளம் மற்றும் நரிப்பயறுவை ஊடுபயிராக நடவும்.

வெர்ட்டிசிலியம் வாடல் நோய் :

அறிகுறிகள்

  • பொதுவாக, பயிர் பூத்துக் காய் பிடிக்கும் தருணத்தில் மிகுதியாக தோன்றும்.
  • இலை நரம்புகளின் இடைப்பட்ட பகுதி வெளுத்து மஞ்சளாக காணப்படும். இலைப் பாகத்தில் வெளி ஒரப்பகுதிகளும் காய்ந்துவிடும்.
  • நரம்புகளின் ஒரங்களில் மட்டும் பசுமை நிறமும் மற்ற பகுதிகளில் காய்ந்த பழுப்பு நிறமும் கொண்ட குவிந்த தோற்றம் “புலியின் கால்தட வரி” போன்று காணப்படும்.
  • செடியின் மேல் பட்டையை நீக்கி (அ) பிளந்து பார்த்தால் இளஞ்சிவப்பு நிறக்கோடுகள் காணப்படும்.

பயிர் பாதுகாப்பு முறைகள் (Crop Protection):

  1. பயிர் பாதுகாப்பு முறைகள் நெல் (அ) குதிரைமசால் (அ) செவ்வந்திபூ கொண்டு 2-3 வருடங்களுக்கு பயிர் சுழற்சி செய்யவும்.
  2. அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை, கார்பாக்சின் அல்லது கார்பென்டசிம் 4 கிராம் / கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
  3. ஜீன் – ஜீலையில், கோடை உழவுக்குப் பின் அறுவடை செய்த தாவர குப்பைகளை அகற்றி தீயிடவும்.
  4. பொட்டாசியம் உரத்தின் அளவை அதிகரிக்கவும்.
  5. அதிகப்படியான தொழுவுரம் 100 டன் / ஏக்கர் இடவும்.
  6. 0.05% பெனோமைல் (அ) 0.1% கார்பென்டசிம் கொண்டு செடிகளின் தூர்களில் ஊற்றி மண்ணை நனைக்கவும்.

மேலும் பருத்தி பயரை தாக்கும் நோய்களையும், அதன் அறிகுறிகளும், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளையும் அடுத்த பகுதியில் நாம் தெரிந்துகொள்வோம் நன்றி..!

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement