வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

படைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்..!

Updated On: June 24, 2024 6:11 PM
Follow Us:
படைப்புழு
---Advertisement---
Advertisement

படைப்புழு மேலாண்மை..!

ஏற்கனவே இருக்கும் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத நிலையில் தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த சின்னஞ்சிறிய புழு விவசாயிகளை வாட்டிவதைக்கின்றது இந்த படைப்புழு. இந்த படைப்புழு (pest attack) குறிப்பாக மக்காச்சோளம், கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் படைப்புழு தாக்குதல் (pest attack) அதிகமாகக் காணப்படுகிறது. சரி வாருங்கள் இந்த பகுதியில், படைப்புழு தாக்கும் பயிர்களையும் (pest attack), அதன் புழு தாக்குதலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

படைப்புழு தாக்குதல் (Pest Attack):

இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு ரசாயனப் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தும் இப்புழுவை முழுவதும் கட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது.

இந்தப் புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்துடன் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் உயிரியல் ஆய்வுக்கூடம் உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்துள்ளது.

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை, ஈரோடு மாவட்ட வேளாண்மைத் துறை இணைந்து மாவட்டத்தின் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த உயிரியல் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.

இதன் மூலம் பயிர்களைத் தாக்கிய படைப்புழுவை உயிரியல் பூச்சிக்கொல்லி முற்றிலும் கட்டுப்படுத்தியது விவசாயிகளிடம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த பூச்சிக்கொல்லி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படைப்புழுவின் தன்மை மற்றும் கட்டுப்படுத்தும் முறை:

இளம் புழுக்களின் தலைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தலைகீழாக இருப்பது போன்று காணப்படும். தாய் அந்துப்பூச்சி 100 முதல் 200 முட்டைகளைக் கொண்ட குவியலாக இலையின் அடிப்பகுதியில் இடுகிறது.

அதில் இருந்து வெளியேறும் வெள்ளைப்புழுக்கள் இலைகளை சுரண்டி தின்பதால் இலைகள் பச்சைநிறத்தை இழந்து வெள்ளை நிறமாக மாறும். இளம்செடிகளில் இலைகளின் உறைகளிலும் முதிர்ந்த செடிகளில் கதிரின் நூல் இலைகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்ட இலைகளில் வரிசையாக துளைகள் காணப்படும். பகல் நேரங்களில் பயிர்களின் தண்டுகளில் தன்னை மறைத்து உள்ளிருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும். இதனைக் கட்டுப்படுத்துவது கடினமானது.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

படைப்புழு தாக்குதல் (Pest Attack) கட்டுப்படுத்தும் முறை:

பூச்சிக்கொல்லியான மெட்டாரைசியம், பெவேரியா, நூரின்ஞ்யென்சிஸ் வகை பூச்சிக்கொல்லிகளை ஒரு லிட்டரில் 10 மில்லி வீதம் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

படைப்புழு தாக்குதல் (pest attack) கட்டுப்படுத்தும் உயிர்க்கொல்லி மருந்துகளை பண்ணாரி அம்மன் ஆலையின் உயிரியல் ஆய்வுக் கூடத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

 

இது போன்ற விவசாயம் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்து பாருங்கள்.  விவசாயம் சார்ந்த தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now