மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..!

Fish-Amino-Acid-Fertilizer

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை..!

விவசாயிகள் அதிக உற்பத்தி, உற்பத்தி திறன் மற்றும் அதிக மகசூல் பெற மீன் அமினோ அமிலம் (fish amino acid) பயன்படுகிறது. இந்த அமினோ அமிலத்தை தாங்களே தயார் செய்து பயிர்கள் மீது தெளிக்கும்போது, பயிர்களுக்கு ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த மீன் அமிலத்தை வறட்சி காலங்களில் பயிர்கள் மீது தெளிக்கும்போது பயிர்களுக்கு அதிக வளர்ச்சியை தந்து மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

சரி வாங்க இயற்கை வளர்ச்சி ஊக்கியான மீன் அமினோ அமிலத்தை (fish amino acid) எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. மீன் கழிவுகள் – 5 கிலோ
  2. நாட்டு சர்க்கரை – 6 கிலோ
  3. ஒரு – பெரிய வாளி

செய்முறை:

மீன் கழிவுகள் எளிதாகவே கிடைக்கும். (மீன் மார்க்கெட்டில் இலவசமாகவே மீன் கழிவுகளை வாங்கி கொள்ளலாம்.)

இப்போது மீன் அமினோ அமிலத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

ஒரு பெரிய வாளியை எடுத்து கொள்ளவும் அவற்றில் இந்த 5 கிலோ மீன் கழிவுகளை சேர்க்கவும். (மீன் செதில், குடல், மீன் வால் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.)

பின்பு ஒரு திடமான குச்சியை கொண்டு நன்றாக குத்தி கிளறிவிடவும். (கைல்கள் கிளற முடியாது என்பதால் குச்சியை பயன்படுத்தி கொள்ளவும்)

பிறகு 6 கிலோ நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அவ்வளவு தான் மீன் அமினோ அமிலம் (fish amino acid) தயார் இந்த மீன் அமினோ அமிலத்தை 20 நாட்கள் வரை காற்று புகாத அளவிற்கு வாளியை மூடி வைக்கவும்.

அதே போல் இந்த மீன் அமினோ அமிலத்தை நிழல் பகுதியில் தான் வைத்திருக்க வேண்டும்.

மேலும் வீட்டு விளங்குழலான நாய், புனைகளிடமிருந்து மிக ஜாக்கிரதையாக இந்த மீன் அமினோ அமிலத்தை 20 நாட்கள் வரை பாதுகாத்து வைத்து கொள்ளவும்.

20-வது நாட்கள் இந்த வாளியை திறந்து பார்த்தால் தேன் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். அதேபோல் அவற்றில் இருக்கும் மீன் கழிவுகள் வாளியின் அடியில் தங்கிவிடும்.

இந்த திரவத்தில் இருந்து எந்த ஒரு கெட்டவாசனைகளும் வீசாது, பழவாசனை வீசினால் மீன் அமினோ அமிலம் தயாராகி விட்டது என்று அர்த்தம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

நாய்,​​ பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மீன் அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.

மீன் அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும்.

இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ,​​ பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE