இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு பகுதி – 2
பகுதி –2 : செடிகள் மற்றும் பயிர்களை அதிகம் தாக்கும் பூச்சிகளை விரட்ட இயற்கை பூச்சி விரட்டிகளை நம் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.
பகுதி – 1 இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ??? |
இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி?
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – இஞ்சி – பூண்டு கரைசல்
பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து சிறிதளவு தண்ணீரில் கரைத்து நோய்த்தாக்கிய பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இவ்வாறு செய்வதினால் பயிர்களை தாக்கும் அனைத்து நோய்களும் அழிந்து விடும்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – அமிர்த கரைசல்
மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை வாளியில் எடுத்துக் கொண்டு, அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 24 மணிநேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும் இப்போது அமிர்த கரைசல் தயார்.
15 நாளைக்கு ஒருமுறை கொடுக்கலாம். தேவைப்பட்டால் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம். ஒரு பங்கு கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் சேர்த்து கரைசலுக்கு கொடுக்கலாம்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – மூலிகை பூச்சி விரட்டி
ஊமத்தை, வேப்பிலை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சிலை, தும்பை இலைகளை 6 கிலோ எடுத்து ஒருலிட்டர் மாட்டு சிறுநீர் சேர்த்து ஒரு வாரம் ஊறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம்.
மூலிகை பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒருலிட்டர் என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – கன ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும்.
பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..! |
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வளர்ச்சியூக்கி
கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை (வாழை, பப்பாளி, சீதா பழம், பரங்கிபழம் ) வாங்கி வந்து நன்றாகப் பிசைந்து அதனுடன் 1 கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை (வெல்லம்) சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் / பிளாஸ்டிக் வாளியில் மூடி வைக்கவும்.
15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும், மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். 15 வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் நல்லதொரு வளர்ச்சி கண்கூட தெரியும். இதனால் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – சுக்கு அஸ்திரம்
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கும் ஆடையை அகற்றி விடவேண்டும்.
ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – நீம் அஸ்திரம்
நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ, நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ, இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மூடி போட்டு மூடி வைக்கக் கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும்.
பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!! |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |