மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..!

Advertisement

மண்புழு உரம் தயாரிக்கும் முறை (How to make vermicompost in tamil)

மண்புழு உரம் தயாரிக்கும் முறை  – இப்போதேல்லாம் மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை இயற்கையான முறையில் உற்பத்தி செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் பயிர்களுக்கு அதிக ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு மிகவும் பயன்படுகிறது. இந்த மண்புழு உரம் மற்றும் மண்புழு எரு நம் வீட்டிலேயே மிக எளிமையாக செலவில்லாமல் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

இதையும் படிக்கவும்  இயற்கை விவசாயம் – வேர் உட்பூசணம் பற்றி நாம் அறிந்ததும், அறியாததும்..!

மண்புழு உரம் தயாரிக்கும் முறை (How to make vermicompost in tamil)

மண்புழு உரம் தயாரிக்கும் முறை அல்லது மண்புழு வளர்ப்பு ஸ்டேப் :1

இந்த மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக்கழிவுகள், சமையலறை கழிவுகள் மற்றும் வீட்டில் உள்ள மற்ற, மக்கக்கூடிய கழிவுகளை மக்க வைக்க வேண்டும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை அல்லது மண்புழு வளர்ப்பு ஸ்டேப் :2

இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் (அ) தொட்டியில் (அ) குழியில் போட்டு வைக்கவும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை அல்லது மண்புழு வளர்ப்பு ஸ்டேப் :3

கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை அல்லது மண்புழு வளர்ப்பு  ஸ்டேப் :4

அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.

மண்புழு குளியல் நீர்:

இந்த மண்புழு உரத்தைப் போலவே, மண்புழு குளியல் நீரும் பயிர்களுக்கு ஊட்டம் தரும்.

மண்புழு உரம் உள்ள தொட்டியில் தண்ணீரைச் சொட்ட விடுவதன் மூலம் மண்புழு குளியல் நீரைத் தயாரிக்க முடியும்.

சொட்டும் நீர் கீழே இறங்கும்போது, மண்புழுவின் உடலில் சுரக்கும் திரவத்தையும், எருவில் உள்ள சத்துகளையும் கழுவிக்கொண்டு கீழே வந்து சேரும்.

இந்த மண்புழு குளியல் நீரை அன்றாடம் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.

மண்புழு குளியல் நீரை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு லிட்டர் மண்புழு குளியல் நீர் கிடைத்தால், அத்துடன் 10 லிட்டர் நல்ல தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து, அதை பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும்.

இதையும் படுக்கவும்  சாம்பல் சத்து பற்றாக்குறைகள் அதற்கான நிவர்த்தி முறைகள்..!

மண்புழு உரத்தின் நன்மைகள்..!

1. இந்த மண்புழு உரத்தில் தாவரத்திற்குத் தேவையான அனைத்து முதன்மையான சத்துகளும் உள்ளன.

2. தாவரங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்குவிக்குறது.

3. புதிய இலை, தண்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும் அதிகரிக்கிறது.

4. மண்புழு உரத்தினைக் கையாளுவது, பயன்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பதும் எளிது.

5. மண்புழு உரத்தில் எந்த கெட்ட வாசனையும் இல்லை.

6. இது மண்ணின் கட்டமைப்பு, காற்றோட்டம், தண்ணீரைச் சேமித்து வைக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது மட்டுமின்றி மண் அரிப்பையும் தடுக்கிறது.

7. மண்புழு உரத்தில் நன்மையளிக்கும் நுண்ணுயிரிகள் அதிகம் உள்ளதால் மண்ணின் சூழலை மேம்படுத்துகின்றன.

8. இவை மண்ணில் மண்புழுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

9. இவை மண்ணில் உள்ள சத்துகள் வீணாகாமல் தடுப்பதுடன் இரசாயன உரங்களின் பயனை அதிகரிக்கின்றன.

10. மண்புழு உரத்தில் நோய் ஏற்படுத்தும் கிருமிகள், நச்சுப் பொருட்கள் மற்றும் களைச்செடி விதைகள் எதுவும் இல்லை.

11. மண்புழு உரங்கள் நோய்க் கிருமிகள் மற்றும் நோய் ஏற்படுவதைக் குறைக்கின்றன.

12. இவை மண்ணில் உள்ள பொருட்களை எளிதில் மட்கச் செய்கின்றன.

13. மண்புழு உரத்தில் வைட்டமின்கள், நொதிகள், ஆக்ஸிஜன்கள் மற்றும் ஜிப்ரலின்கள் போன்ற ஹார்மோன்கள் அதிகம் உள்ளன.

இதையும் படிக்கவும்  இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement