தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!

Advertisement

தென்னை உர மேலாண்மை:

தென்னை சாகுபடியில், தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை இயற்கை மற்றும் ரசாயனம் என இரு வகைகளில் உரமிடலாம்.

சரி இப்போது நாம் இந்த பதிவில் தென்னை மரம் உர மேலாண்மை பற்றிய தெளிவான விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..!

உரமும், நீரும் தென்னைக்கு தலையாய தேவைகளாகும். நீர் தேவையை பொறுத்தவரை, நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு, ஒரு நாளைக்கு, 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

பல இடங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நீர் மேலாண்மை பின்பற்ற முடியாத நிலை உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு, சரியான அளவில், சரியான நேரத்தில் உரங்களை இடாமல் இருப்பதே, மகசூல் குறைய முக்கியமான காரணமாகும். பொதுவாக, பருவ மழை காலத்தில், மண்ணில் மிதமான ஈரம் இருக்கும்போது, உரமிடுதல் அவசியமாகும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை பரிந்துரை செய்யப்படும் உரத்தினை, இரண்டு சம அளவாக பிரிந்து, ஜூன், ஜூலை மாதத்தில், மரத்தை சுற்றி, அரை வட்டத்தில் ஒரு பாதியும், மறு பாதியை, இரண்டாவது அரை வட்டத்தில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் இட வேண்டும்.

தென்னை மரத்திலிருந்து, 1.50 மீட்டர் முதல், 2 மீட்டர் வரையிலான பகுதியில் உள்ள வேர்கள், அதிக உறிஞ்சும் திறன் கொண்டதாக இருக்கும். எனவே, மரத்தில் இருந்து, 1.80 மீட்டர் தொலைவில், ஒரு அடி ஆழத்தில், அரைவட்ட வடிவில் குழி எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.

இயற்கை முறை :

தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) முறையில் தென்னையை சுற்றிலும், பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றை பயிரிட்டு, மண்ணில் மடக்கி உழ வேண்டும்.

தென்னைக்கு என, நுண்ணூட்ட சத்து கலவை உரகடைகளில் கிடைக்கிறது. இக்கலவை, ஒரு கிலோ மற்றும் ஒரு பாக்கெட் அஸோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை கலந்து இட வேண்டும்.

நுண்ணூட்ட சத்து கலவை மற்றும் உயிர் உரங்களை, தேவையான அளவு, தொழு உரத்துடன் கலந்து, தனியே இடலாம்.

குறிப்பு:

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா வாங்கும் போது அதை தயாரிக்கும் நிறுவனம் தரமானதா எனவும் காலாவதி தேதி உள்ளதா என சோதிக்க வேண்டும் மற்றும் CPU count 10*8 இருக்க வேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

ரசாயன முறை :

தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை குறிப்பாக ரசாயன முறை உர மேலாண்மை மூலம் மகசூல் சற்று அதிகமாக எடுக்க முடியும். ஆனால் மரத்தின் வாழ்நாள் குறையும் மண்ணிற்கும் பாதிப்பு ஏற்படும்.

கன்று நட்டு ஆறு மாதங்களுக்கு மேல் பொட்டாஷ் , யூரியா , சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை எருவுடன் கலந்து மக்க வைத்து, இடலாம்.

எனவே, தென்னை விவசாயிகள், உர பரிந்துரையின்படி ஆண்டு தோறும் தவறாமல் உரமிட வேண்டும்.

இவ்வாறு செய்தால், குரும்பைகள் அதிகம் பிடித்து, குரும்பை கொட்டுவது வெகுவாக குறைக்கப்பட்டு, மகசூல் அதிகரிப்பதுடன், காய்களின் தரம் மற்றும் எண்ணைய் சத்து அதிகரிக்கும்.

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement