மணிச்சத்து + மணிச்சத்து பற்றாக்குறைகள் + நிவர்த்தி முறைகள்..!

மணிச்சத்து

மணிச்சத்து என்றால் என்ன ?

மணிச்சத்து குறிப்பாக (uses of fertilizers) முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது.

மணிச் சத்து (uses of fertilizers) நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது. (குறிப்பாக சல்லி வேர்கள்), மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது.

மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச் சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்துக்கள் கூடுதலாக தேவைப்படுகின்றது.

பயிரின் முன் வளர்ச்சி நிலையில் போதுமான மணிச்சத்தை (uses of fertilizers) எடுத்துக் கொண்டால், பின் வளர்ச்சி நிலைகளில் மணிச்சத்தே நெற்பயிருக்குள்ளேயே மறு இயங்கும் தன்மை பெற்று செயல்படுகிறது.

மேலும் மணிச்சத்தே நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது. இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது.

மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச் சத்து ஈடு செய்கிறது.

தழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..!

மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்:

பயிர்கள் குறைந்த துார்களுடன், வளர்ச்சி குன்றி காணப்படும்.

இலைகள் குறுகலாக, குட்டையாக, மிகவும் நிமிர்ந்து, “அழுக்கு” கரும்பச்சை நிறமுடன் இருக்கும்.

முதிர்ந்தஇலைகள், பழுப்பான சிவப்பு நிறமாக மாறி, பின் ஊதா நிற வளர்ச்சியுடன் காணப்படும்.

தண்டுகள் மெல்லியதாக நுாற்புக்கதிர் வடிவத்தில் காணப்படும்.

குறைந்ததுார்கள் வைப்பு/குறைவான கிளை வைத்தல், குறைவான வேர் வளர்ச்சி.

நிவர்த்தி முறைகள்:

விதை முலாம்பூசுதல் அல்லது நாற்று நனைப்பாக “பாஸ்போபாக்டீரியா”
வை மண்ணில் அளிக்க (uses of fertilizers) வேண்டும்.

மணிச்சத்து உரத்தை (uses of fertilizers) பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக, ஒரு ஏக்கருக்கு 15-30 கிலோ அளவில் அளிக்க வேண்டும்.

மண்ணின் கார அமில நிலை அளவு குறைவாக இருந்தால், வயலில் நீர்தேக்குவதற்கு முன் “ராக் பாஸ்பேட்டை” துாவி விட வேண்டும்.

மணிச்சத்தின் மூலப்பொருட்கள்:

தொழு உரம், உயிர் உரங்கள் (fertilizers names) (மணிச்சத்து கரைப்பான்கள்) ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, சூப்பர்பாஸ்பேட் (ஒன்று), சூப்பர்பாஸ்பேட் (இரண்டு), சூப்பர்பாஸ்பேட் (மூன்று), சுரங்கத்தாது கசடு, முசோரி டை அமோனியம் பாஸ்பேட் அமோனியம் பாஸ்பேட் (க்ரோமர்).

மணிச்சத்து நச்சுத்தன்மை (Fertilizers information):

(மிகுதியான மணிச்சத்தினை (fertilizers information) அளித்தலால் ஏற்படும் தீங்கு)

மண்ணிலே நிலைத்து விட்டு, நெற்பயிருக்கு கிடைக்கப் பெறாது. துத்தநாக சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.