சாம்பல் சத்து பற்றாக்குறை..!
ஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து (uses of fertilizers) மிகவும் அவசியம், விவசாயத்தில் அதிக மகசூலை பெறுவதற்கு, இயற்கை உரங்களின் உபயோகத்தினை விட செயற்கை உரங்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. ஒரு பயிர் வளர்ச்சிக்கு (Fertilizers Names) தழை, மணி மற்றும் சாம்பல் சத்து மிகவும் இன்றியமையாதவையாகும்.
தழைச்சத்து பயிரின் வளர்ச்சிக்கும், மணிச்சத்து பயிரின் வேர்வளர்ச்சிக்கும், சாம்பல் சத்து தண்டுகளின் உறுதிக்கும், பயிர் வறட்சியை தாங்குவதற்கும், பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகிறது.
தழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..! |
சரி இந்த பகுதியில் சாம்பல் சத்து என்றால் என்ன? அவற்றின் அறிகுறிகள் மற்றும் அதற்கான நிவர்த்தி முறைகளையும் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!
சாம்பல் சத்து என்றால் என்ன ?
நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல்ச் சத்து போதுமான திறனை அளிக்கிறது.
சாம்பல் சத்தானது (uses of fertilizers), மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது. நொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது.
ஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது.
மற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.
துார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.
பயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80 சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது. மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது.
சாம்பல்ச் சத்து குறைபாட்டு அறிகுறிகள் (Fertilizers Information):
வறட்சியான சூழலில், சாம்பல்ச் சத்து குறைபாடு அறிகுறிகள் தென்படும்.
வறண்ட வானிலை மற்றும் அதனால் ஏற்படும் மண் மாற்றங்களினால் பயிர் மண்ணிலிருந்து உட்கொள்ளும் திறன் குறைகிறது.
முதிர்ந்த இலைகளில் எலுமிச்சை மஞ்சள் நிற விளிம்புகளாக குறைபாட்டு அறிகுறிகள் முதலில் தோன்றும்.
பழுப்பு நிறத்திற்கு மாறி பிறகு இலை விளிம்புகள் காய்ந்து போவது மணிச்சத்து குறைபாட்டின் தீவிரத்தை குறிக்கும்.
மணிச்சத்து + மணிச்சத்து பற்றாக்குறைகள் + நிவர்த்தி முறைகள்..! |
சாம்பல்ச் சத்து குறைபாடு நிவர்த்தி :
Fertilizers Information – பயிரின் அடர்த்தியையும் இடைவெளியையும் மாற்றி அமைக்கவேண்டும்.
களைகளை அகற்றவேண்டும்.
பருவத்திற்கு முன்னரே சாகுபடி செய்து, செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்.
அடிமண் இட்டு, மண் ஆழத்தை அதிகப்படுத்த வேண்டும்.
மானாவாரி பயிருக்கு, கர்நாடகாவில் ஒரு எக்டருக்கு 25 கிலோ மற்றும் தமிழ்நாட்டில் ஒரு எக்டருக்கு 20 கிலோ பொட்டாஷ் உரம் இடவேண்டும். பாசனப்பயிருக்கு, கர்நாடகாவில் ஒரு எக்டருக்கு 50 கிலோ மற்றும் தமிழ்நாட்டில் ஒரு எக்டருக்கு 45 கிலோ பொட்டாஷ் உரத்தை கைவிதைப்பு செய்து, நடவு (அ) விதைப்புக்கு முன் மண்ணில் கலக்கவேண்டும்.
1% பொட்டாசியம் குளோரைடு கரைசல் தெளிக்கவேண்டும்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> | Whatsapp Group Link. |