உரங்கள் என்றால் என்ன.? | உரம் வகை (Types of fertilizers)..! | Types of Fertilizers Used in Agriculture
இயற்கை உரங்கள் பெயர்கள் – உரம் என்பது விளை நிலங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவது ஆகும். அதாவது மண்ணில் குறைந்து வரும் இயற்கை சத்துப் பொருட்களை ஈடு செய்து செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது ‘உரம் இடுதல்’ ஆகும்.
சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன.
குறிப்பாக மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும்.
இருப்பினும் ஊட்டச்சத்துக்களின் நிலை, எண்ணிக்கை மற்றும் தன்மையைப் பொறுத்து உரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..! |
சரி வாங்க ஊட்டச்சத்து உரம் பெயர்கள்(Fertilizers names) பற்றி இந்த பகுதில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
இயற்கை உரங்கள் பெயர்கள்..!
ஊட்டச்சத்துக்களின் நிலையைப் பொறுத்து பல வகைப்படும்:
உரம் வகைகள்:- கரிம உரங்கள் (இயற்கை உரம்) (Organic Fertilizer):
உரம் பயன்கள்: மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிகளவு சேர்க்கப்படுவதே கரிம உரம் அல்லது இயற்கை உரம் ஆகும்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): தொழுஉரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகியவற்றில் அதிகளவு உள்ளது.
உரம் வகைகள்:- கனிம உரங்கள்(செயற்கை உரம்) (Inorganic Fertilizer):
உரம் பயன்கள்: பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும் செயற்கைப் பொருளுக்கு கனிம உரம் அல்லது செயற்கை உரம் என்று பெயர்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): யூரியா, டைஅம்மோனியம் பாஸ்பேட், ஃபெர்ரஸ் சல்பேட் போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது.
மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..! |
ஊட்டச்சத்துகளின் எண்ணிக்கையை பொறுத்த வகைப்பாடு:
உரம் வகைகள்:- நேரடி உரங்கள் (Straight Fertilizer):
உரம் பயன்கள்: ஊட்டச்சத்துக்களில் எதாவது ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை மட்டும் அளிக்கும் உரம் நேரடி உரம் எனப்படும்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names):
யூரியா – தழைச்சத்து.
சூப்பர் பாஸ்பேட் – மணிச்சத்து.
மியூரேட் ஆப் பொட்டாஷ்-சாம்பல் சத்து.
உரம் வகைகள்:- கலப்பு உரங்கள் (Mixed Fertilizer):
உரம் பயன்கள்: இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நேரடி உரங்களை சேர்ந்த கலவைக்கு கலப்பு உரம் என்று பெயர். கலப்பு உரம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மூன்றையும் அளித்தால் அது முழுமையான உரம் எனப்படும்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): NO. 10 கலப்பு உரம், No. 8 கலப்பு உரம்.
உரம் வகைகள்:- கூட்டு உரங்கள் (Complex Fertilizer):
உரம் பயன்கள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர் ஊட்டச்சத்துக்களை ரசாயன முறைப்படி சேர்க்கப்பட்ட உரத்திற்கு கூட்டு உரம் என்று பெயர்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): 17:17:17 காம்ப்ளெக்ஸ், 19:19:19 காம்ப்ளெக்ஸ்.
உரம் வகைகள்:- உரங்களின் தன்மையைப் பொறுத்த வகைப்பாடு:
உரம் பயன்கள்: அமில உரங்கள் (Acidic Fertilizers) நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): அம்மோனியம் சல்பேட், ஜிப்சம்.
உரம் வகைகள்:- கார உரங்கள் (Basic Fertilizers):
உரம் பயன்கள்: நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால், காரத்தன்மையை ஏற்படுத்தி நிலத்தின் காரநிலையை அதிகரிக்கும்.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): சோடியம் நைட்ரேட்.
உரம் வகைகள் – நடுநிலை உரங்கள் (Neutral Fertilizers):
உரம் பயன்கள்: இவ்வகை உரங்களை இடுவதால் நிலத்தில் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ ஏற்படுவதில்லை.
உரம் பெயர்கள் உதாரணம் (Example Fertilizers names): சூப்பர் பாஸ்பேட், பாறை பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!! |
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |