தழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..!

தழைச்சத்து உரங்கள்

உரங்கள் வகைகள் (Types Of Fertilizer):

உரங்கள் என்பது இயற்கை அல்லது செயற்கை மூலங்களிலிருந்து வரக்கூடிய எந்தப் பொருளையும் மண்ணில் சேர்த்து, பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதாகும்.

தழைச்சத்து உரங்கள் (Fertilizers Information):

தழைச்சத்து பற்றாக்குறை முதன்முதலில் மண்ணில் தோன்றுகிறது மற்றும் பயிர்களும் தழைச்சத்து உரத்தை மற்ற சத்துக்களை விட அதிகளவில் எடுத்துக் கொள்கிறது. இதனால் தழைச்சத்து உரங்கள் உரங்களிலேயே முதல் இடத்தை வகிக்கிறது.

80%க்கு மேலான உரங்கள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அவை நைட்ரஜன் உரங்களாக முக்கியமாக யூரியாவாக தயாரிக்கப்படுகின்றன.

இது பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது மற்றும் பொருளாதார உற்பத்தி கணக்கிட முடியாத வகையில் உள்ளது.

ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!

சரி இப்போது தழைச்சத்து உரங்கள் (fertilizers information) பற்றி படித்தறிவோம் வாங்க..!

தழைச்சத்து உரங்கள் (Types Of Fertilizer):

 • அம்மோனியம்.
 • நைட்ரேட்.
 • அமோனியா மற்றும் நைட்ரேட்.
 • அமைடு உரங்கள்.

உரங்கள் வகைகள் (Types Of Fertilizer):-

தழைச்சத்து உரங்கள் – அம்மோனியம் உரங்கள் வகைகள் :-

 1. அம்மோனியம் சல்பேட் (fertilizers names).
 2. அம்மோனியம் குளோரையடு (fertilizers names).
 3. அன்ஹைடரஸ் அம்மோனியம். (fertilizers names).

அம்மோனியம் பயன்கள் (uses of fertilizers):

அம்மோனியா உரங்கள் தழைச்சத்தை அம்மோனியம் அல்லது அம்மோனியா வடிவத்தில் வைத்திருக்கும்.

நீரில் எளிதில் கரையக்கூடியது மற்றும் பயிர்களுக்கு எளிதாக கிடைக்கப் பெறும் நிலையில் உள்ளது.

நெல்லைத் தவிர, மற்ற எல்லாப் பயிர்களும் தழைச்சத்தை நைட்ரேட் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும். இந்த உரங்கள் கரைவதால் ஏற்படும் இழப்பை எதிர் கொள்ளக் கூடியது, அம்மோனியம் அயனிகள் மண்ணில் எளிதாக உறிஞ்சிக் கொள்ளும் நிலையில் இருக்கும்.

வாழையில் இவ்வளவு வருமானமா? பயிரிடும் முறை விளக்கத்துடன்.

தழைச்சத்து உரங்கள் – நைட்ரேட் உரங்கள் வகைகள் (Types Of Fertilizer):-

 1. சோடியம் நைட்ரேட். (fertilizers names).
 2. கால்சியம் நைட்ரேட் (fertilizers names).
 3. பொட்டாசியம் நைட்ரேட். (fertilizers names).

நைட்ரேட் பயன்கள் (uses of fertilizers):

நைட்ரேட் வடிவத்தில் நைட்ரஜன் இதில் இருக்கும். நைட்ரஜன் அயன்கள் நீரில் கரைந்து ஓடிவிடும். ஏனென்றால் இந்த நைட்ரேட் அயனிகள் மிக எளிதாக மண்ணில் நகரும்.

தொடர்ந்து இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் மண்ணின் அமிலத்தன்மை குறையும். இந்த உரங்கள் அடிப்படையிலேயே மண்ணில் படியும் தன்மை கொண்டது

தழைச்சத்து உரங்கள் – அம்மோனியம் மற்றும் நைட்ரேட் உரங்கள் வகைகள் (Types Of Fertilizer):-

 1. அம்மோனியா நைட்ரேட் (fertilizers names).
 2. கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் (fertilizers names).
 3. அம்மோனியம் சல்பேட் நைட்ரேட் (fertilizers names).

அம்மோனியம் மற்றும் நைட்ரேட் பயன்கள் (uses of fertilizers):

இதில் அம்மோனியா மற்றும் நைட்ரேட் உள்ளது. இந்த உரங்கள் பயிர்களால் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தழைச்சத்து உரங்கள் – அமைடு உரங்கள் வகைகள் (Types Of Fertilizer):

 1. யூரியா (fertilizers names).
 2. கால்சியம் சைனமைடு (fertilizers names).

அமைடு உரங்கள் பயன்கள் (uses of fertilizers):

நீரில் நன்றாகக் கரையக் கூடியது. மண்ணில் எளிதாக சிதைவுறும்
அமைடு வடிவத்தில் உள்ள நைட்ரஜன் எளிதாக அம்மோனியாவாகவும், நைட்ரேட் வடிவத்திலும் மண்ணில் மாறும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.