ஒவ்வொரு மரத்தையும் நடுவதற்கு முன் எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும்…? என்று தெரிஞ்சுக்கோங்க…?

Advertisement

மரம் நடுவது எப்படி..? | Minimum Distance Between Trees in Tamil..!

மரங்கள், பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கிறது. அது மட்டுமில்லாமல் நாம் அனைவரும் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனையும் வெளியிடுகிறது. இது போன்ற பல நன்மைகளை தரக்கூடிய மரங்களை நாம் எப்படி நட வேண்டும்..? மற்றும் எப்படி நட்டால் விவசாயத்தில் அதிக மக சூலை பெற முடியும்..? என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

 இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்மிக வேகமாக வளரும் மரம்

இடைவெளி விட்டு நடுவதால் என்ன பயன்..?

மரங்களுக்கு தேவையான இடைவெளி விட்டு நட்டல் தான் மரங்கள் நன்றாக பரந்து வளரும். நம் முன்னோர்கள் தென்னைக்கு தேரோட, வாழைக்கு வண்டியோட, கரும்புக்கு ஏரோட, நெல்லுக்கு நண்டோட என கணக்கிட்டுதான் விவசாயம் செய்து வந்தார்கள்.

இவ்வாறு இடைவெளி விட்டு நட்டால் தான் மரங்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூலை தரும்.

அதுமட்டும் இல்லாமல் மரங்கள் வளர்வதற்கு தேவையான இடைவெளி இருந்தால் தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து காய்களை தரும்.

ஒவ்வொரு மரங்களின் இடைவெளி அளவு:

forest tree spacing

1. வாழை மரம்:

வாழை மரத்திற்கு 8அடிx 8அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

இவ்வாறு 8 அடி இடைவெளி விட்டு நட்டால் ஒரு ஏக்கருக்கு 681 வாழை கன்றுகள் நடலாம்.

2. தென்னை மரம்:

distance between two coconut trees in tamil

தென்னை மரத்திற்கு 24அடிx24அடி இடைவெளி விட வேண்டும். தென்னை மரத்தில் பல வகையான ரகங்கள் இருக்கிறது.

நெட்டை ரகங்களுக்கு 25அடிx25அடி இடைவெளியும், குட்டை ரகங்களுக்கு 20அடிx 20அடி இடைவெளியும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 26அடிx 26அடி இடைவெளியும் விட்டு நட வேண்டும்.

பயன்கள்:

இவ்வாறு தென்னை மரத்திற்கு 24அடி இடைவெளி விட்டு நடுவதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 76 தென்னை மரங்கள் நட முடிகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ தென்னை சொட்டு நீர் பாசனம் செய்தால் என்ன பயன்..!

3. மலைவேம்பு:

மலைவேம்பு மரத்திற்கு 10அடிx10அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

10 அடி இடைவெளி விட்டு நட்டால் ஒரு ஏக்கருக்கு 436 மலைவேம்பு மரங்கள் நட முடிகிறது.

4. வேப்பமரம்:

வேப்ப மரத்திற்கு 15அடிx15அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

15 அடி இடைவெளி விட்டு நாட்டல் ஒரு ஏக்கருக்கு 194 வேப்ப மர கன்றுகள் நடலாம்.

5. தேக்கு மரம்:

trees distance in tamil

தேக்கு மரத்திற்கு 10அடிx10அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

தேக்கு மரத்திற்கு 10 அடி இடைவெளி விட்டு நட்டால் ஒரு ஏக்கருக்கு 436 தேக்கு மர கன்றுகள் நட முடியும்.

6. சந்தன மரம்:

சந்தன மரத்திற்கு 15அடிx15அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

சந்தன மரத்தை 15 அடி இடைவெளி விட்டு நட்டால் ஒரு ஏக்கருக்கு 194 சந்தன மர கன்றுகள் நட முடியும்.

7. பனைமரம்:

distance between trees in tamil

பனை மரத்திற்கு 10அடிx10அடி இடைவெளி விட வேண்டும்.

பயன்கள்:

பனை மரத்தை 10 அடி இடைவெளியில் நட்டால் ஒரு ஏக்கருக்கு 436 பனை மர கன்றுகள் நடலாம்.

8. பப்பாளி மரம்:

பப்பாளி மரத்தை 7அடிx7அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

மரத்தில் பூச்சிகள் எதுவும் தாக்காமல் பப்பாளி நிறைய காய்க்க இதை ஒரு முறை ட்ரை செய்து பார்த்தீர்களா..!

9. பலா மரம்:

பலா மரத்தை 22அடிx22அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

10. கொய்யா மரம்:

கொய்யா மரத்தை 14அடிx14அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

11. மாதுளை மரம்:

மாதுளை மரத்தை 7அடிx7அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!

12. மாமரம்:

மாமரத்தின் உயர்ந்த ரகத்தை 30அடிx30அடி இடைவெளியிலும், சிறிய ரகத்தை 15அடிx 15அடி இடைவெளியிலும் நட வேண்டும்.

13. முருங்கை மரம்:

முருங்கை மரத்தை 12அடிx12அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement