விவசாயம் – கனகாம்பரம் செடி வளர்ப்பது எப்படி..!
இரகங்கள்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறையில் சிவப்பு, மஞ்சள், டெல்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ஆகிய இரகங்கள் இவற்றில் உள்ளது.
பச்சை நிற கனகாம்பரம் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது.
கனகாம்பரம் விவசாயம் – பருவ காலம்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை பயிரிடலாம்.
கனகாம்பரம் விவசாயம் – மண் நிர்வாகம்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றது. மண்ணின் அமிலக் காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்கவேண்டும்.
அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!! |
கனகாம்பரம் விவசாயம் – விதையளவு:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு சுமார் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதை பயிரிடுவதற்கு 60 x 60 செ.மீ இடைவெளி தேவைப்படும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ இடைவெளி தேவைப்படும்.
கனகாம்பரம் விவசாயம் – நாற்றுகள் தயாரித்தல்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை நிலத்தினை நன்கு உழுது தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பாத்திகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.
விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் விதைத்த, 60ம் நாளில் நடவுக்கு தயாராகிவிடும்.
அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!! |
கனகாம்பரம் விவசாயம் – நிலம் நிர்வாகம்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும்.
கடைசி உழவின் போது ஏக்கருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். பின்னர் தேவைக்கேற்ப பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதை நேர்த்தி:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை நிலத்தில் நாற்றுக்களை நடும் முன் எமிசான் (1 கிராம் / லிட்டர் ) கரைசலில் நனைத்து நடவேண்டும். இதன் மூலம் நாற்றுகள் இறப்பை கணிசமாக குறைக்க முடியும்.
விதைத்தல்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை 60 நாட்கள் ஆன நாற்றுக்களை 60 செ.மீ இடைவெளியில் பார்களில் நீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும்.
நீர்ப்பாசனம்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே சீராக நீர் பாய்ச்சுவது அவசியம்.
உரமிடுதல்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை தேர்வு செய்த நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும்.
செடிகள் நட்டு மூன்று மாதங்கள் கழித்து ஏக்கருக்கு 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.
இந்த உர அளவை ஒவ்வொரு ஆறு மாத கால இடைவெளியிலும் கொடுக்கவேண்டும். இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும்.
செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால், மகசூல் அதிகரிக்கும்.
டெல்லி கனகாம்பரத்திற்கு செடிகள் நட்ட, 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.
பிறகு 90 நாட்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்.
பாதுகாப்பு முறை:
களை எடுக்க வேண்டும்:
கனகாம்பரம் செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை செடிகள் நட்டவுடன் முதல் மாதத்தில் ஒரு களை எடுக்க வேண்டும். செடிகள் வளர்ந்தவுடன் களைகள் அதிகம் தோன்றாது.
பயிர் பாதுகாப்பு முறை:
நூற்புழுவை கட்டுப்படுத்த நிலத்தில் ஈரம் இருக்கும் போது செடிகளின் வேர்ப்பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் குருணை மருந்தினை இடவேண்டும்.
வாடல் நோய் தென்பட்டால் எமிசான் மருந்தினை லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கரைத்து செடிகளைச் சுற்றி வேர்ப்பாகத்தில் ஊற்றிவிடவேண்டும்.
அசுவினிப் பூச்சிகளை கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை:
செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கவேண்டும்.
மகசூல்:
ஒரு வருடத்தில் ஒரு எக்டருக்கு 2000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் இரகத்தில் ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 2800 கிலோ மலர்கள் வரை கிடைக்கும்.
கனகாம்பரத்தின் பயன்கள்:
மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.
அலங்காரப் பொருட்களிலும் கனகாம்பரம் பூவை பயன்படுத்தலாம்.
கனகாம்பரம் பூ தலையில் சூடுவதால் தலைவலி, ஒற்றை தலைவலி வருவதில்லை.
கனகாம்பரம், மாலை அணியும் போது நம் இருதயத்தின் சக்தியால் இது உடல் முழுவதும் பரவுகிறது. பிராண சரீரம் பலம் பெறுகிறது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |