கறவை மாடுகளுக்கான அனைத்து நோய்க்கும் மூலிகை மருத்துவம்..!

கால்நடை மூலிகை மருத்துவம்

கால்நடை மூலிகை மருத்துவம்..! மாடு வைத்தியம்..!

Kalnadai Maruthuvam: உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க கால்நடை மூலிகை மருத்துவம் செய்யவேண்டியது மிகவும் அவசியம் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம்.

எனவே இந்த பகுதியில் கால்நடை மூலிகை மருத்துவம்(kalnadai maruthuvam) சிலவற்றை இப்போது நாம் காண்போம்..!

ஆடு மற்றும் மாடுகளுக்கு இந்த சத்தான மசால் உருண்டை கொடுங்க..!

மாடு வைத்தியம் / kalnadai maruthuvam..!

மடிவீக்கம் நோய் குணமாக நாட்டு மருத்துவம்:-

 • கால்நடை மூலிகை மருத்துவம்: கறவை மாடுகளுக்கு பொதுவாக மடி வீக்கம் நோய் ஏற்பட முக்கிய காரணம், நுண் கிருமி தொற்று மூலமாகவே மடி வீக்கம் நோய் ஏற்படுகிறது.
 • மடிநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால், மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு, பால் சுரக்கும் தன்மையை பசு இழந்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்ட மடியைக் குணப்படுத்துவது இயலாத காரியமாகி விடும்.
 • எனவே பாதிக்கப்பட்ட மாட்டை பிரித்து, கால்நடை மருத்துவரின் மூலம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தினை கொண்டு குணப்படுத்த முடியும்.
 • மாட்டின் மடியானது வீக்கமாகவும் மிக கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்து காணப்படும்.
 • பாதிக்கப்பட்ட மாட்டின் பாலானது திரிந்து வெள்ளையாகவோ, மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.
 • பாதிக்கப்பட்ட மாட்டின் மடியை நன்கு கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கறவை மாடு

மடிவீக்கம் நோய் குணப்படுத்த மூலிகை பொருட்கள்:

1. சோற்றுக்கற்றாழை –200 கிராம்
2. மஞ்சள் பொடி –50 கிராம்
3. சுண்ணாம்பு –05 கிராம் (ஒரு புளியங்கொட்டை அளவு)

இந்தியாவில் உள்ள நாட்டு மாடு இனங்களின் வகைகள்..!

கால்நடை மூலிகை மருத்துவம் ..!

 • மேல் கொடுக்கப்பட்ட மூன்று பொருட்களையும் கலந்து நன்கு கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.
 • ஒரு கை அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து நீர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மாட்டின் மடி வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக தடவவேண்டும்.
 • இவ்வாறு நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

அனைவருக்கும் பயனுள்ள கை வைத்தியம்..!

கால்நடை மூலிகை மருத்துவம் – வயிறு உப்புசம்:

மாடு வைத்தியம் 1: கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது.

இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள்:

 1. வெற்றிலை-10 எண்ணிக்கை,
 2. பிரண்டை-10 கொழுந்து,
 3. வெங்காயம் –15 பல்,
 4. இஞ்சி –100 கிராம்,
 5. பூண்டு –15 பல்,
 6. மிளகு-10 எண்ணிக்கை,
 7. சின்ன சீரகம்-25 கிராம்,
 8. மஞ்சள்-10 கிராம்.

பயன்படுத்தும் முறை

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து, இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கால்நடை மூலிகை மருத்துவம் – மாடு கழிச்சல் மருந்து:

மாடு வைத்தியம் 2: ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து, அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கால்நடை மூலிகை மருத்துவம் – கோமாரி வாய்ப்புண்:

மாடு வைத்தியம் 3: சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய் கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும்.

ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கால்நடை மூலிகை மருத்துவம் – கோமார் கால் புண்:

மாடு வைத்தியம் 4:

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் :

 1. குப்பைமேனி –100 கிராம்,
 2. பூண்டு-10 பல்,
 3. மஞ்சள்-100 கிராம்,
 4. இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

படைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil