குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

Advertisement

வெள்ளரிக்காய் சாகுபடி முறை (Cucumbers Cultivation In Tamil):-

கோடை காலங்களில் அதிக வருமத்தை தரக்கூடிய வெள்ளரிக்காய் சாகுபடி முறையை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம் வாங்க…

வெள்ளரிக்காய் சாகுபடி ..!

ரகங்கள்:

கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி ஆகிய இரகங்கள் வெள்ளரிக்காய் சாகுபடி முறைக்கு ஏற்றது.

பருவ காலங்கள்:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) பொறுத்தவரை கோடைக்காலத்தில், பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மழைக்காலத்தில் ஜூலை மாதத்திலும் வெள்ளரிக்காய் சாகுபடி முறைக்கு ஏற்ற பருவக்காலங்கள் ஆகும்.

சின்ன வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மண்:

வெள்ளரிக்காயை களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யலாம்.

தட்பவெப்பநிலை:

மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் வெள்ளரிக்காய் வளர்ச்சிக்கு ஏற்றது.

கார அமிலத்தன்மை:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) பொறுத்தவரை சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும்.

நிலம் நிர்வாகம்:

விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு – நெடுக்காக நான்கு முதல் ஐந்து முறை உழவு செய்ய வேண்டும்.

பின்பு, ஏக்கருக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும்.

ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் 2 கிலோ எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.

விதை நேர்த்தி:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) முறையில் வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

விதைத்தல்:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) முறையில் விதை நேர்த்தி செய்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஜந்து விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) பொறுத்தவரை விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும்.

நன்கு முளைத்தவுடன் ஒரு தண்ணீர் பாய்ச்சி, அதன் பின் வாரம் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

கூடவே, ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தம் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட்டால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உரங்கள்:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) பொறுத்தவரை விதைத்த 30 ஆம் நாளில் செடிகளை கொத்திவிட்டு மேல் உரமாக 50 கிராம் யூரியாவை ஒவ்வொரு குழிக்கும் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

அல்லது:

30 – ம் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வளர்ச்சி ஊக்கி:

வெள்ளரிக்காய் சாகுபடி (Cucumbers cultivation in tamil) பொறுத்தவரை செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்க எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீரில் 2.5 மில்லி என்ற அளவில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை என நான்கு முறை தெளிக்கவேண்டும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

பாதுகாப்பு முறை:

களை நிர்வாகம்:

விதைத்த 20-25 ஆம் நாளும், பின்னர் ஒரு மாத இடைவெளியிலும் களை எடுக்கவேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

பழ ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

சாம்பல் நோய்க்கு:

இதை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும். டிடிடீ, பிஎச்சி, தாமிரம் மற்றும் கந்தகப்பவுடர் போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.

அறுவடை:

விதைத்த 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். மொத்தம் 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம்.

மகசூல்:

எக்டருக்கு 90 நாட்களில் 8 முதல் 10 டன்கள் வரை பிஞ்சுக் காய்கள் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள் :-

வெள்ளரிக்காய் பயன்கள் (cucumber benefits in tamil) 1:- 

95% நீர் சத்து கொண்டது, சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரை கொண்டது. இதை அதிகம் சாப்பிட்டால் உடலின் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

வெள்ளரிக்காய் பயன்கள் (cucumber benefits in tamil) 2:- 

வெள்ளரியில் வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் உள்ளது, மேலும் தோல் பாதுகாப்புக்கு மிகவும் உதவுகிறது. வெள்ளரி ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய் பயன்கள் (cucumber benefits in tamil) 3:- 

வாய் துர்நாற்றம் போக்கவும் மற்றும் பல் ஈறுகளை பாதுகாக்கவும் உதவுகிறது.

செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல் புண் குணப்படுத்தி ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது.

வெள்ளரிக்காய் பயன்கள் (cucumber benefits in tamil) 4:- 

வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

வெள்ளரிக்காய் பயன்கள் (cucumber benefits in tamil) 5:- 

இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி மிகவும் நல்லது.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement