கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

Advertisement

முலாம்பழம் சாகுபடி செய்யலாம் வாங்க..!

விவசாயிகள் பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் சாகுபடி குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தொடர்ந்து முலாம்பழம் சாகுபடி (melon cultivation in tamil) செய்து வருகிறார்கள் விவசாயிகள்.

ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!

சரி இப்போது முலாம்பழம் சாகுபடி முறை (melon cultivation in tamil) பற்றி தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

முலாம்பழம் சாகுபடி முறை:

ரகங்கள்:

முலாம்பழம் சாகுபடி (melon cultivation in tamil) பொறுத்தவரை இரகங்களில் அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

முலாம்பழம் சாகுபடி முறைக்கு ஏற்ற பருவகாலம்:

டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை விதைத்தால் கோடை காலத்திற்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரிப் பயிராக ஜூன் மாதத்திலும் விதைக்கலாம்.

நிலம்:

செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மணல். சரியான மணல் வகைகள் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமில தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

முலாம்பழம் சாகுபடி (melon cultivation in tamil) தேர்ந்தெடுத்த நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது ஏக்கருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை சாகுபடிக்கு பயன்படுத்த வேண்டும்.

பின்பு 2 அடி (60 செ.மீ) அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். வாய்க்கால்களின் பக்கவாட்டில் 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி மண்புழு அல்லது கலப்பு உரங்களைப் போட்டு, மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

விதையளவு:

ஏக்கருக்கு 3 கிலோ விதைகள் சாகுபடிக்கு போதுமானது.

விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் அல்லது கார்பன்டிசம் ஏக்கருக்கு 2 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நேர்த்தி செய்த விதைகளை குழிகளின் மத்தியில் மூன்று அல்லது நான்கு விதைகள் வீதம் 0.6 மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

நீர் மேலாண்மை:

விதை விதைப்பதற்கு முன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உர மேலாண்மை:

55 கிலோ மணிச்சத்து, 55 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 200:100:100 கிலோ பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து ஜீவாமிர்தம்:

முலாம்பழம் சாகுபடி (melon cultivation in tamil) பொறுத்தவரை பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். அப்போது ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும்.

10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும்.

விதையூக்கி அளித்தால்:

10 லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் எத்ரல் வளர்ச்சி ஊக்கியை நன்கு கலக்கி விதைத்த 15 நாட்கள் கழித்தும், பின் வாரம் ஒரு முறை என 4 வாரங்களுக்கு செடியின் மீது தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

முலாம்பழம் சாகுபடி பொறுத்தவரை இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மி.லி மாலத்தியான் அல்லது 2 கிராம் காப்பர்கலந்து வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசல் 5% தெளிக்க வேண்டும்.

காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழிக்க வேண்டும். நிலத்தை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் நன்கு படுமாறு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

விதை விதைத்ததில் இருந்து 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும். விதைகளை விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு 2 நாற்றுக்களை மட்டும் விட்டு மீதியை நீக்கிவிட வேண்டும்.

முலாம்பழம் சாகுபடி (Melon Cultivation In Tamil) – அறுவடை:

காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 20-25 டன் வரை முலாம்பழம் கிடைக்கும்.

அழகு + ஆரோக்கியம் + வருமானம் = சோற்றுக் கற்றாழை சாகுபடி ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.
Advertisement