எளிய முறையில் சாமை பயிரிடுதல் பற்றி தெரியுமா..?

சாமை சாகுபடி முறைகள்

நாம் செய்யும் தொழிலேயே மிகவும் கடினமான தொழில் என்றால் அது விவசாயம் தான். ஏனென்றால் என்ன தான் நாம் பார்த்து பார்த்து விவசாயம் செய்து வந்தாலும் கூட பயிரிட்டு அறுவடை செய்வதற்குள் ஏதோ பெரிய மழையோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்துகள் வந்தாலும் விவசாயம் ஆனது முற்றிலும் பாதிக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு பயிருக்கும் பயிடிரிடும் நாட்கள் முதல் அறுவடை செய்யும் நாட்கள் வரை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டு தான் இருக்கும். அதனால் பயிருக்கு ஏற்றவாறு தான் சாகுபடி செய்ய வேண்டும். எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய சாமை சாகுபடி முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

Samai Sagupadi in Tamil

இரகங்கள்:

சாமையில் கோ 1, கோ 3, கோ 4 மற்றும் பையூர் 2 என்ற நான்கு வகையான ரகங்கங்கள் உள்ளது. இத்தகைய ரகங்களில் பையூர் 2 என்பதை பயிரிடும் முறை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பையூர் 2 என்ற ரகம் 85 நாட்கள் கால அளவினை கொண்டுள்ளது. மேலும் கோ 1 இத்தகைய ரகங்ககள்  75 நாட்கள் அளவிலான காலத்தை கொண்டுள்ளது.

பருவகாலம்:

சாமை சாகுபடியினை பொறுத்தவரை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிரிட வேண்டும்.

எந்த நிலத்தில் சாகுபடி செய்வது:

செம்மண் நிலத்தினை தவிர மற்ற அனைத்து விதமான நிலங்களிலும் சாமை சாகுபடி செய்யலாம்.

விதை விதைக்கும் முறை:

விதை விதைக்கும் முறை

முதலில் நிலத்தினை நன்றாக உழுது ஈரப்பதம் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 1 ஏக்கருக்கு 5 கிலோ விதை என்ற அளவில் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு 2.5 செ.மீ ஆழத்திலும், ஒரு நாற்றுக்கும் மற்றொரு நாற்றுக்கும் 7.5 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்து விதியினை நிலத்தில் ஊன வேண்டும். அதேபோல் வரிசையில் 22.5 செ.மீ இடைவெளி விட்டு நட வேண்டும்.

ஒருவேளை கொர்ரு அல்லது விதைப்பான் கொண்டு நட விரும்பினால் தோராயமாக 4 கிலோ விதை தேவைப்படும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்

நீர் பாய்ச்சுதல்:

விதை விதைத்த பயிர் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு போதிய அளவு மழைப்பொழிவு இருந்தால் போதும். ஒருவேளை மழை இல்லை என்றால் 300 மி.மீ முதல் 350 மி.மீ வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரம்:

நீங்கள் இயற்கையான கழிவுகள் அடங்கிய உரங்களை நிலத்திற்கு அளிக்கலாம். அப்படி இல்லை என்றால் பொட்டாசியம், யூரியா போன்ற செயற்கை உரங்களை மண்ணிற்கு ஏற்றவாறு அளிக்கலாம்.

களை நிர்வாகம்:

 சாமை விவசாயம்நடவு செய்து 20-வது நாளில் சரியாக களை எடுக்க வேண்டும்.

 

அறுவடை:

பயிர் செய்த சாமை ஆனது நன்கு முற்றிய நிலைக்கு 80 நாட்களுக்குள் வந்து விடும். இத்தகைய பதத்திற்கு வந்தவுடன் நீங்கள் அறுவடை செய்து விடலாம். ஆகவே ஹெக்டேருக்கு 850 முதல் 1,000 கிலோ சாமையினை தோராயமாக அறுவடை செய்யலாம்.

கம்பு சாகுபடி முறைகள்..!Pearl Millet Cultivation in Tamil

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil