சின்ன வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

Advertisement

சின்ன வெங்காயம் சாகுபடி காலம் | Small Onion Cultivation Process in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சின்ன வெங்காயம் எப்படி சாகுபடி செய்வது எப்படி.? (Small Onion Cultivation Process in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்மில் பலருக்கும் விவசாயம் செய்வதில் அதிக விருப்பம் இருக்கும். நாள், விவசாயம் எப்படி செய்வது எப்படி.? என்பது தெரியாது. ஒவ்வொரு பயிரையும் சாகுப்படி செய்ய ஒரு முறை இருக்கிறது. அதன்படியே விவசாயம் செய்ய வேண்டும். அந்த வகையில் சின்ன வெங்காயம் சாகுப்படி செய்வது எப்படி என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சின்ன வெங்காயம் சாகுபடி முறை:

சின்ன வெங்காயம் சாகுபடி முறை

  • சின்ன வெங்காயம் சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்கள் கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய இரகங்கள் ஏற்றவை.
  • ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர், சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) முறைக்கு ஏற்ற பருவம் ஆகும்.
  • மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) முறைக்கு உகந்ததாகும்.
  • ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.
  • விதை வெங்காயத்தை 10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் ஊன்ற வேண்டும்.
  • விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

உரங்கள் | சின்ன வெங்காயம் உர மேலாண்மை:

  • சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) முறைக்கு ஏற்ற இரகங்கள் பொறுத்தவரை நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும்.
  • பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

பாதுகாப்பு முறை:

களை நிர்வாகம்:

சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:

சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

சின்ன வெங்காயம் சாகுபடி பொறுத்தவரை இந்தப் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.

சின்ன வெங்காயம் இத்தனை நோய்களுக்கு மருந்தா..?

இலைப்புள்ளி நோய்களுக்கு:

சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை நோய்களில் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளிக்க வேண்டும்.

கீழ்த்தண்டு அழுகல் நோய்களுக்கு:

சின்ன வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் காணப்படும் கோழிக்கால் சீக்கு, கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலை கருகல் நோய்களுக்கு:

சின்ன வெங்காயம் சாகுபடி பொறுத்தவரை இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்கும்.

அறுவடை:

சின்ன வெங்காயம் சாகுபடி பொறுத்தவரை வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மகசூல்:

சின்ன வெங்காயம் சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.

சின்ன வெங்காயம் பயன்கள் 1 :-

நான்கு அல்லது ஐந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் (onion benefits in tamil) மறையும்.

கருவேப்பிலை கிடிகிடுன்னு வளர வெங்காயம் மட்டும் போதும்ங்க..

சின்ன வெங்காயம் பயன்கள் 2:

வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சின்ன வெங்காயம் பயன்கள் 3:

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் (onion benefits in tamil) உதவுகிறது.

சின்ன வெங்காயம் பயன்கள் 4:

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.

சின்ன வெங்காயம் பயன்கள் 5:

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

சின்ன வெங்காயம் பயன்கள் 6:

சிறிய வெங்காயத்தை அரைத்து அவற்றின் சாறை வடிகட்டி தலையில் சிறுது நேரம் ஊறவைத்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் தலை குளித்துவர பொடுகுதொல்லை நீங்கி, முடி அடர்த்தியாக (onion benefits in tamil) வளரும்.

சின்ன வெங்காயம் பயன்கள் 7:

சிறிய வெங்காயத்தை இரண்டு பச்சையாக தினமும் சாப்பிட்டு வர உடல் சூடு தணிந்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil

 

Advertisement