செடி, கொடிகளை செழிப்பாக வளர செய்யும் கரைசல் தயாரிக்கும் முறை..!

Advertisement

செடிகள் நன்கு வளர

அனைவருக்கும் வீட்டில் உள்ள செடி மற்றும் கொடிகள் செழிப்பாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருக்கும் அழுகிய காய்கறி, பழம் மற்றும் அரிசி கழுவிய தண்ணீர் என அனைத்தினையும் செடிகளுக்கு உரமாக அளிப்பார்கள். இதோடு மட்டும் இல்லாமல் கடையில் விற்கும் உரத்தினையும் வாங்கி செடிகளுக்கு உரமாக அளித்து வளர்த்து வருவார்கள். அதனால் தான் வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டும் வைத்து செடி மற்றும் கொடிகள் செழிப்பாக வளர கரைசல் தயாரிப்பது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

கற்பூர கரைசல்:

கற்பூர கரைசல் சிறந்த ஒரு இயற்கை பூச்சி கொல்லியாக பயன்படுகிறது. ஆகையால் இந்த கரைசலை செடி, கொடி மற்றும் மரங்களுக்கு அளிப்பதன் மூலம் இயற்கையாகவே பூக்கள் நிறைய பூத்து நல்ல மகசூலை தருகிறது.

அதுமட்டும் இல்லாமல் செடிகளுக்கு தேவையான ஹார்மோன்களையும் அளிக்கிறது.

கற்பூர கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • கற்பூரம்- 5 கிராம்
  • வேப்ப எண்ணெய்- 50 மில்லி
  • சீயக்காய் தூள்- சிறிதளவு
  • மஞ்சத்தூள்- 3 தேக்கரண்டி
  • மாட்டு கோமியம்- 1/2 லிட்டர்
  • கிளிஞ்சல் சுண்ணாம்பு- 10 கிராம்
  • நீலகிரி தைலம்- 5 மில்லி

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் செழித்து வளர வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை.. 

கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள கற்பூரத்தை நன்றாக நீலகிரி தைலத்துடன் சேர்த்து கரைத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள மஞ்சள்தூள் மற்றும் வேப்ப எண்ணெயினை நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும்படி கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் கற்பூர கரைசலுக்கு தேவையான பதம் கிடைக்கும்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு 10 நிமிடம் கழித்த பிறகு பாத்திரத்தில் கரைத்து வைத்துள்ள மஞ்சள் தூளுடன் எடுத்துவைத்துள்ள சுண்ணாம்பு, மாட்டு கோமியம் மற்றும் சீயக்காய் தூள் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக கலந்து வைத்துள்ள பொருட்களுடன் கரைத்து வைத்துள்ள கற்பூரத்தையும் சேர்த்து நன்றாக கலந்து காற்று போகாத அளவிற்கு மூடி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் கற்பூர கரைசல் தயார் ஆகிவிட்டது. 

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

செடிகளுக்கு உரம் அளிக்கும் முறை:

செடிகளுக்கு கற்பூர கரைசலை பயன்படுத்தும் போது 1 டேங்கிற்கு வெறும் 100 மில்லி மட்டுமே போதுமானது. அதனால் 100 மில்லி கற்பூர கரைசல் எடுத்துக்கொண்டு அதற்கு டேங்கிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து உரமாக செடி மற்றும் கொடிகளுக்கு அளியுங்கள்.

இந்த கரைசலை பயன்படுத்துவதன் மூலம் செடிகளுக்கு தேவையான ஹார்மோன்கள் தூண்டப்பட்டு பூக்கள் நிறைய பூக்கும்.

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் 
Advertisement