செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli Sagupadi in Tamil..!

marigold cultivation

செண்டு மல்லி சாகுபடி முறை (Marigold Cultivation)..!

செண்டு மல்லி சாகுபடி முறையில் (chendu malli sagupadi in tamil) விதைவிதைத்து இருபது நாட்களில் நாற்று வளர்ந்து விடும்.

வளர்ந்த நாற்றுக்களை ஒரு ஏக்கருக்கு பதினெட்டாயிரம் நாற்றுக்களாக பிரித்து நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்யப்பட்ட அறுபது நாட்களில் செண்டு மல்லி பூ பிடித்து விடுகிறது. பின்னர் நூறு நாட்கள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கிறது.

கோடைகாலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு பதினைந்து டன் முதல் இருபது டன் வரை மகசூல் கொடுக்கிறது. குளிர் காலங்களில் செடி சிறுத்து ஏக்கர் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து டன் வரை மகசூல் கொடுக்கிறது.

சரி இப்போது நாம் செண்டு மல்லி சாகுபடி முறை (chendu malli sagupadi in tamil) பற்றி தெளிவாக படித்தறிவோம்.

இதையும் படிக்கவும்  மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

செண்டு மல்லி பூ சாகுபடி முறை (marigold cultivation)..!

செண்டு மல்லி பூ சாகுபடி (chendu malli sagupadi in tamil) முறையில் எல்லா வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். அதுவும் எல்லா காலகட்டத்திலும் சாகுபடி செய்யலாம்.
இதன் கடைசி உழவின் போது 25 டன் அடி உரமான தொழு உரத்தை இடலாம். பின் 15 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

செண்டுமல்லி விதை அளவு:

ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதையளவு. நடவு பருவம் ஆண்டு முழுவதும் என்றாலும், ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நடவு செய்ய ஏற்றவை.

செண்டு மல்லி சாகுபடி – நாற்று:

நிலத்தை 2-3 முறை நன்கு உழுது கடைசி உழுதின்போது மக்கிய தொழு உரத்தை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும்.

விதைகளை 20 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்த பின் 15 செ.மீ இடைவெளியில் விதைகளை வரிசையாக பாத்திகளில் விதைக்க வேண்டும்.

விதைத்த விதையை மண் கொட்டி நன்றாக மூட வேண்டும்.
விதைத்த 7 நாட்களில் விதை முளைத்துவிடும், 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுகளை பிடுங்கி நடவேண்டும்.

இதையும் படிக்கவும்  அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!

செண்டுமல்லி விவசாயம் – நடவு:

வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.

செண்டு மல்லி சாகுபடி – ஊட்டச்சத்து மேலாண்மை:

ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்து உரத்தினை இட்டு, செடிகளின் வேர் பகுதியில் மண் அணைக்க வேண்டும்.

செண்டுமல்லி விவசாயம் – நீர்ப் பாசனம் மற்றும் நீர்வழி உரமிடுதல்

செண்டுமல்லி சாகுபடி (marigold cultivation) பொறுத்தவரை வீரிய ஒட்டு ரகத்துக்கு 90:90:75-வுடன் தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்பாசனத்துடன் இட வேண்டும்.

செண்டு மல்லி சாகுபடி – களை எடுத்தல்:

செண்டுமல்லி சாகுபடி (chendu malli sagupadi in tamil) பொறுத்தவரை நடவு செய்த 30, 60ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.

மண் அணைத்தல்:

செண்டுமல்லி சாகுபடி (marigold cultivation) பொறுத்தவரை களையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு வேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

செண்டுமல்லி செடிகளின் நுனி கிள்ளுதல்:

நடவு செய்த 30 நாட்களில் செடிகளின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும். இப்படி செடிகளின் நுனியை கிள்ளி விடுவதால் செடிகள் நன்றாக துளிர் விட்டு வளரும்.

செண்டு மல்லி சாகுபடி அறுவடை:

மேற்கண்ட முறைகளை முறையாக கடைபிடித்தால் நடவு செய்த 60ஆம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம்.

 

இதையும் படிக்கவும்  அதிக லாபம் தரும் சாமந்தி !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com