நெல் சாகுபடி முறைக்கு சொட்டு நீர் பாசனம் அமோக மகசூல் ..!

சொட்டுநீர் பாசனம்

நெல் சாகுபடி முறைக்கு சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation)..!

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், சொட்டு நீர் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation) – முழு விளக்கம்..!

 

சரி இப்போது சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation) மூலம் நெல் சாகுபடி செய்வதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

நெல் சாகுபடி முறைக்கு சொட்டுநீர் பாசனம் (Drip Irrigation)..!

விவசாயிகள் தற்போது 50 சதவீதம் மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் முறை நெல் பயிர் சாகுபடி, அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த சொட்டுநீர் பாசனம் முறை மூலம் வழக்கத்தைவிட 25 சதவீதம் உற்பத்தி அதிகரிக்கும் சூழல், உருவாகியுள்ளது.

விவசாயிகள், நெல், கரும்பு, வாழை ஆகியவற்றை விளைவித்து வருகின்றனர். இருப்பினும் நெல் பயிரிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் நிலையில் பருவ மழை பொய்த்துப்போவது, காவிரி நீர் பிரச்சனை, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, கடல் நீர் உட்புகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒரு போகம் பயிர் செய்வதே சவாலாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடலூர் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், முழு அரசு மானியத்தில், முதல் முறையாக சொட்டு நீர் பாசன முறையில் நெல் பயிர் சாகுடி செய்துள்ளார்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், சொட்டு நீர்ப் பாசனம் மூலம், 14 லட்சம் லிட்டர் மட்டுமே போதுமானது என்கிறார் கணேசன்.

இதனால், முன்பு 6 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சி வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரம் மட்டுமே பாய்ச்சுவதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், சொட்டு நீர் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்திற்கு 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குநர் பூவராகவன் தெரிவித்துள்ளார்.

தற்போது விவசாயப் பணிகளுக்கு போதிய அளவில் ஆட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், சொட்டு நீர் பாசனம் (Drip Irrigation) முறையை பின்பற்றுவதால் உற்பத்தி அதிகரிப்பதுடன் களையெடுக்க, உரம் போட, தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஆட்கள் தேவை குறைந்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் சொட்டு நீர் பாசனம் (Drip Irrigation) அமைக்கும் முறை..! முழு விளக்கம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com