சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! | சொட்டு நீர் பாசனம் அமைப்பது எப்படி
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. விவசாயம் செய்யும் முறைகளில் ஒன்று தான் சொட்டு நீர் பாசனம். ஆனால், பலருக்கும் சொட்டு நீர் பாசனம் முறை பற்றி தெரிவதில்லை. ஆகையால், நீங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் Drip Irrigation Meaning in Tamil பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Drip Irrigation Meaning in Tamil:
சொட்டு நீர் பாசனம் என்பது குழாய் வழியாக பயிர்களுக்கு தேவையான நீரை, மழை சாரல் போல் துளிதுளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்பகுதியிலோ நேரடியாக நீர் வழங்கும் அமைப்பு தான் சொட்டு நீர்ப்பாசனம் முறையாகும்.
இந்த சொட்டு நீர் பாசனம் முறை பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது.
நீராதாரம் குறைந்து வந்தாலும், சாகுபடி நிலம் குறைந்து வந்தாலும் உற்பத்தி திறனை அதிகரித்து, தரமான உணவு விளைச்சல் பொருட்களை அதிகரிக்க நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த நீரைக் கொண்டு நிலையான வருமானத்தை பெற வேண்டிய அவசியமான நிலையில் விவசாயிகள் உள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டே இந்த சொட்டு நீர் பாசனம் முறை திட்டமிடப்பட்டு செயல்படுகிறது.
இந்த நவீன முறை, பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன.
- தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும்.
- அதிக விளைச்சல்.
- விளைபொருளின் உயர்ந்த தன்மை.
- நிலம் சமமாக இருக்க தேவை இல்லை.
- களைகள் குறைவு மற்றும் உரம் இடுதலிலும் 30 சதவிகிதம் குறைவு.
இம்முறையை பயன்படுத்தினால் அனைத்து பயிர்களிலும், நீரில் 40 – 60 சதவிகிதம் மிச்சப்படுத்தி மகசூலில் 30 முதல் 100 சதவிகிதம் அதிகம் எடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் தற்பொழுது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் எக்டேர் தென்னைக்கும் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஏக்கர் மற்ற பயிர்கட்கும் (திராட்சை, வாழை, கரும்பு) சொட்டு நீர் பாசனம் செயல்படுகின்றது. தற்பொழுது உள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அனைவரிடமும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தெளிப்பான் தடைபடுதல்:
தெளிப்பு நீர் பாசனம், தண்ணீர் குளம், ஆழ்கிணறு, கால்வாய், ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இவ்வகையான தண்ணீரின் தரம் அதன் உற்பத்தி இடத்தை பொறுத்து அமையும். சொட்டுவான்கள் சிறு பொருட்களால் மாசடைந்து தடைபடக்கூடும்.விரிவடைதல், சுருங்கும் தன்மையால் ஏற்படுகிறது.
மேலும் குறிப்பாக இது, குப்பைகள் வேகமாக தெளிப்பான்களில் புகும் போது ஏற்படுகிறது.
- பூச்சிகள், எலிகள் தொல்லைகள்.
- பாசி மற்றும் பாக்டீரியா வளர்ந்து உள்ளே படிதல்.
- ரசாயன பொருள் உள்ளே தங்குதல் ஆகியவற்றால் சொட்டுவான் தடைபடுக்கூடும்.
பராமரிக்கும் முறை:
- பிரதான மற்றும் கிளை குழாய்களின் கடைசியில் உள்ள மூடியை வாரம் ஒருமுறை திறந்து விட வேண்டும்.
- இதன் மூலம் பிரதான மற்றும் கிளை குழாய்களில் உள்ள தூசுகளை வெளியேற்றலாம்.
- சொட்டுவானில் தண்ணீர் சொட்டுகிறதா என்றும் குறிப்பிட்ட அளவு நீர் வருகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
- சொட்டுவான்கள் மற்றும் கிளை குழாய்கள் ஒழுங்கான இடத்தில் உள்ளனவா என்றும் பரிசோதிக்க வேண்டும்.
- வடிகட்டியில் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என்றும் பரிசோதிக்க வேண்டும்.
- சொட்டுநீர் பாசனத்தில் வடிகட்டி என்பது இருதயம் போன்றது.
- வடிகட்டி சரியில்லை என்றால் சொட்டுவான்கள் அனைத்திலும் துாசுகள் அடைத்து தண்ணீரின் வெளியேற்றம் குறைந்து விடும்.
- வடிகட்டியின் இரு முனைகளில் உள்ள அழுத்தமானியை கொண்டு வடிகட்டியினை எப்பொழுது சுத்தம் செய்யப் பட்டது என்பதை அறிய முடியும்.
வடிகட்டியினை சுத்தம் செய்யும் முறை:
- பேக் வாஸ்- தினமும் 5 நிமிடம் தண்ணீரை அதன் எதிர் திசையில் செலுத்தி அதிலுள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம் அதிலுள்ள மண் துகள்கள் மற்றும் துாசுகளை அகற்ற முடியும்.
- அழுத்தமானிகளில் வடிகட்டியின் முன் மற்றும் பின்புறம் உள்ள அளவுகளின் வித்தியாசம் 0.3 கிலோ செ.மீ., அளவை தாண்டக்கூடாது.
- இந்த வித்தியாசம் வரும்பொழுது கண்டிப்பாக பேக்வாஸ் செய்ய வேண்டும்.
- பேக்வாஸ் செய்யும்பொழுது நன்றாக மணல் வடிகட்டியை கிளறி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது வடிகட்டி அடியிலுள்ள சிறு துகளையும் சுத்தம் செய்ய முடியும்.
வலை வடிகட்டி டிஸ்க் வடிகட்டி:
- வாரத்திற்கு ஒரு முறை வலை வடிகட்டியினை வெளியில் எடுத்து நன்றாக தண்ணீரில் விட்டு கழுவ வேண்டும்.
- அதிலுள்ள ரப்பர் சீலை உடைக்காமல் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.
- பேக்வாஸ் செய்யலாம். அழுத்தமானியின் வித்தியாசம் 0.2 கிலோ செ.மீ., ஆக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
பிரதான குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் அடைப்பை அகற்றுதல்:
- சில நேரங்களில் மணல் மற்றும் வண்டல் மண் போன்ற சிறிய துகள்கள் வடிகட்டிகளில் சிக்காமல் பிரதான குழாய்களில் வந்து அடைத்து கொள்ளும்.
- சில வகை பாசிகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் குழாய்களில் வந்து தங்கிவிடும். இவற்றை நீக்க வாரம் ஒருமுறை பிளஸ் வால்வை திறந்து விட வேண்டும்.
- பக்கவாட்டு குழாய்களில் உள்ள அடைப்புகள் அதன் நுனியில் உள்ள வால்வை நீக்கி வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
பகுதி – 2 சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |