சொட்டு நீர் பாசனம் நன்மைகள் :-
Sottu Neer Pasanam: தற்போது உள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் விடுதல் என்பது மிகவும் சிரமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சொட்டு நீர் பாசனம் (drip irrigation) ஒரு சிறந்த வழிமுறையாகும். அதை பற்றி காண்போம்.
தழைச்சத்து உரங்கள் அதன் வகைகள்..!
சொட்டு நீர் பாசனம் நன்மை:
- குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யலாம்.
- இந்த நீர் பாசனம் மூலம் 75% நீரை சேமிக்கலாம்.
- சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் பெற முடியும்.
- பயிர் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்.
- தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம்.
- களை எடுக்க வேண்டியதில்லை.
- ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.
- தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.
சொட்டு நீர் பாசனம் முறை:
சொட்டு நீர் பாசனம் இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
1. வெளிப்புறமாக குழாய்களைப் பதிப்பது
2. நிலத்துக்குக் கீழ் உட்புறமாக குழாய்களைப் பதிப்பது
இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட முறை ‘கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்’ (Sub surface Drip Irrigation, SDI) எனப்படும். இம்முறை மூலம், களை எடுக்கும் போதும், அறுவடை செய்யும் போதும் குழாய்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சொட்டு நீர் பாசனம் காரணிகள்:
நிலம் அமைப்பு:
நீரை தேக்கி வைக்க முடியாத மணல் பரப்புகளில், நீர் பாசனம் மிக அதிகளவு தேவைப்படும்.
மேலும் மலைசார்ந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதினால் சொட்டு நீர் பாசனம் (drip irrigation) மூலம் நீர் குறைவாக பயன்படுத்தப்படுவதனால் நீர் வீணாவது குறைக்கப்படும்.
காற்று வீச்சு:
அதிக வேகத்தில் காற்று வீசும் பொழுது தெளிப்பு நீர்ப் பாசனத்தின் (Sprinkler irrigation) மூலம் தண்ணீர் செலுத்துவது முடியாத காரியம். அப்படிப்பட்ட இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் நீரை அதிக வினைத்திறனுடன் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
தண்ணீர்:
கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ள இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் உதவியாக இருக்கும்.
தண்ணீரின் தரம்:
பயிருக்குச் செலுத்தப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீர் செலுத்தினால், தண்ணீரில் உப்பு தேங்கி பயிரை தாக்குவது குறையும்.
சொட்டு நீர் பாசனம் முறையில் பூசணி சாகுபடி..!
விளைச்சல் பயிர்:
பொதுவாகவே சொட்டு நீர்ப்பாசனம் செய்ய ஆரம்பச்செலவு அதிமாக ஆவதால் இது பெரும்பாலும் பழ மரங்கள் உள்ள தோட்டங்கள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் பயிர் நிலங்களில் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. இப்படிப்பட்ட சூழல்கள் நிலவக்கூடிய இடங்களில் சொட்டு நீர்ப் பாசனம் அதற்கே உரிய சிறப்பம்சங்கள் மூலம் முன்னிலையில் இருக்கிறது.
sottu neer pasanam – உபயோகிக்கப்படும் உபகரணங்கள்
- மேல்நிலை தொட்டி.
- குழாய்கள்
- சொட்டு குழாய்கள்
- வடிக்கும் பகுதி
- உர பகுதி
- பின்னோக்கிய நீரோட்டத்தை கட்டுப்படுத்தும் கருவி.
- அழுத்த மணி
பிரச்சனைகளுக்கான தீர்வுகள்:
சல்பேட், பாஸ்பேட், போன்ற உரங்களின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது குழாய்களில் உப்பு தேங்கி அடைப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனைக்கு தீர்வாக, மாதம் ஒரு முறை குழாய்களில் “குளோரின்” செலுத்தப்படுவதனால் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கலாம்.
மழைக்காலங்களில் பாசி அதிகமாகப் படியும் என்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை “குளோரின்” செலுத்தப்பட வேண்டும்.
மேலும் கால்சியம் கார்பனேட் அடைப்பு ஏற்படும்போது, அதனை நீக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் பைப்புகளில் செலுத்தப்பட வேண்டும்.
பாசன முறைகளுக்கான அட்டவணை:
பயிர் | சொட்டு நீர்ப்பாசனம் தேவைப்படும் நீரினளவு | மற்ற முறைகள் தேவைப்படும் நீரினளவு |
மீதப்படும் நீரினளவு |
செலவு (ஹெ.ஏ) |
தேங்காய் | 75-100 | 200-300 | 45 | 30,000 |
திராட்சை | 25-40 | 90-100 | 48 | 50,000 |
மாம்பழம் | 30-50 | 90-150 | 40 | 28,000 |
கொய்யா | 20-30 | 70-100 | 50 | 34,000 |
சப்போட்டா | 20-30 | 70-100 | 50 | 28,000 |
வாழை | 8-12 | 30-40 | 45 | 56,000 |
எலுமிச்சை | 10-20 | 25-65 | 60 | 50,000 |
பப்பாளி | 5-8 | 18-26 | 68 | 56,000 |
கத்தரிக்காய் | 1-2 | 4-8 | 53 | 5,000 |
வெண்டை | 1-2 | 4-6 | 40 | 75,000 |
மிளகாய் | 1-2 | 3-6 | 62 | 75,000 |
அதிக விளைச்சலை அள்ளி தரும் ஓலா முறை நீர்ப்பாசனம்!
அரசு வழங்கும் மானியம்:
Sottu Neer Pasanam Maniyam: சொட்டு நீர் பாசனம் செலவு – சொட்டு நீர்ப் பாசனம் அமைத்திட ஆகும் மொத்தச் செலவுத் தொகையில் 65% இந்திய அரசு, விவசாயிகளுக்கு மானியமாக வழங்குகிறது.
சொட்டு நீர்ப் பாசனம் செய்ய ஆகும் ஆரம்பச் செலவில் மானியமாக ரூ.40,000/- ஹெ.ஏ. அரசிடம் இருந்து அளிக்கப்படுகிறது.
இது தவிர விதை, நீரில் கரையும் உரங்களுக்காக ரூ.25,000/- ஹெ.ஏ வழங்கப்படுகிறது.
பழப் பயிர்கள், காய்கறிகள், பூக்கள், தென்னை, கரும்பு ஆகிய பயிர்களில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஓர் உழவர் குடும்பத்துக்கு அதிக அளவாக 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு நகல், மண், நீர் பரிசோதனை முடிவறிக்கை மற்றும் நிறுவன விலைப்புள்ளியுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக் கலை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை பற்றி தெரிஞ்சிக்க பகுதி – 1 யை படியுங்கள்.
சொட்டு நீர் பாசனம் in English:-
சொட்டு நீர் பாசனம் in English – Drip Irrigation.
பகுதி – 1 சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம். |