சொட்டுநீர் பாசனம் மூலம் செவ்வாழை சாகுபடி முறை (Red banana cultivation)..!
இன்று நாம் இயற்கை விவசாயத்தில் செவ்வாழை சாகுபடி செய்வது எப்படி? மற்றும் பராமரிப்பு முறை போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.
வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் செவ்வாழை வாழைப்பழம். சரி வாருங்கள் பதிவில் விவசாயம் அதுவும் சொட்டுநீர் பாசனம் மூலம் செவ்வாழை சாகுபடி முறை எப்படி என்பதை பார்க்கலாம்.
செவ்வாழை சாகுபடி முறை:-
செவ்வாழை சாகுபடி செய்ய தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும்.
பின் இரண்டடி இடைவெளியில் சொட்டுநீர் குழாய் அமைக்க வேண்டும்.
அடுத்ததாக குழிக்கு ஒரு செவ்வாழை கன்று என்று நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு செய்த பிறகு தொடர்ந்து மண் காயாத அளவிற்கு தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம் |
உரங்கள்:-
செவ்வாழை சாகுபடி பொறுத்தவரை நடவு செய்த எட்டாம் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் பஞ்சகாவிய கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
நடவு செய்த 30-ம் நாள் 4 டன் அளவு ஆட்டு எருவை நடவு செய்த கன்றுகளைச் சுற்றிப் பரவலாக இட வேண்டும்.
32-ம் நாள் 1 லிட்டர் மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள் மீது தெளிக்க வேண்டும்.
40-ம் நாள் 4 டன் நெல் உமி சாம்பலைத் தூவி, பவர் டில்லர் மூலம் மண்ணில் கலக்கச் செய்ய வேண்டும்.
நடவு செய்த 45-ம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, ஒருநாள் வைத்திருக்க வேண்டும்.
பிறகு மேலாகத் தெளியும் நீரைப் பயன்படுத்த வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகளின் மீது தெளிக்க வேண்டும்.
60-ம் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை, 2 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள் மீது தெளிக்க வேண்டும்.
65-ம் நாள் 10 லிட்டர் கடல்பாசி திரவத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
75-ம் நாள் 1 லிட்டர் கடல்பாசி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள் மீது தெளிக்க வேண்டும்.
90-ம் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
3 மற்றும் 8-ம் மாதங்களில் கன்றுகளைச் சுற்றி மண் அனைத்து விட வேண்டும்.
நடவு செய்த 8-ம் மாதம் 1 லிட்டர் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்களின் மீது தெளிக்க வேண்டும்.
9-ம் மாதங்களுக்கு பிறகு தார்கள் விட ஆரம்பிக்கும். அப்போது 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்களின் குருத்து பகுதியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! |
அறுவடை:-
செவ்வாழை சாகுபடி பொறுத்தவரை 12-ம் மாதத்திற்கு மேல் தார்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். செவ்வாழையில் மறுதார்கள் செழிப்பாக இருக்காது என்பதால், அறுவடை முடிந்த பின்பு மரங்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிலத்தில் பரப்பி உழுதுவிட வேண்டும். இதனால் மண்ணின் சத்து அதிகரிக்கப்படுகிறது.
செவ்வாழை பயன்கள் (Red banana benefits tamil)..! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |