எலுமிச்சை சாகுபடி செய்வது எப்படி???
ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டக்கலை பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் அதிக சாகுபடியை விவசாயிகள் பெறலாம். எலுமிச்சை என்றாலே மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலை பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. சரி இப்போது எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!
எலுமிச்சை சாகுபடி முறைகள் (Lemon Cultivation In Tamil)..!
மண் மற்றும் கால நிலை:
மண்:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை சுமார் 3 மீட்டர் ஆழத்திற்கு மண் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், களிமண் இல்லாத மணல் பாங்கான நிலங்களில் எலுமிச்சை சாகுபடி செழிப்பாக வளரும்.
கால நிலை:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளியைவிட வேண்டும். அப்படி நடும்போது ஒரு ஏக்கருக்கு 160 செடிகள் நடவு செய்யலாம். நோய்த் தடுப்பு செய்யப்பட்ட எலுமிச்சை நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.
குழி தயாரிக்கும் முறை:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை 75 செ.மீ சுற்றளவு உள்ளவாறு குழி தோண்ட வேண்டும்.
நீர் பாசனம்:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை நன்கு வளரும் வரை நீர் பாசனம் செய்வது மிகவும் அவசியம்.
முக்கியமாக வேர் பகுதிகளில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
உரமிடுதல்:
தழைச்சத்து 2 பாகங்களாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இட வேண்டும்.
தொழுஉரத்தை முதல் வருடத்துக்கு 10 கிலோவும், ஆண்டுதோறும் 5 கிலோவும் அதிகரிக்க வேண்டும்.
தழைச்சத்து முதல் வருடம் 200 கிராமில் தொடங்கி ஆண்டுக்கு 100 கிராம் அளவில் சேர்த்து இட வேண்டும்.
மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் அளவில் போட்டு, ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
உரங்களை இடும்போது மரத்தில் இருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் போட்டு கொத்தி விட வேண்டும்.
புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் கலந்து அந்தக் கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகளின்றி நேராக வளர விட வேண்டும்.
எலுமிச்சை செடியின் ஊடுபயிராக அவரை குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம்.
பயிர் நன்கு வளர:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை பயிர் வளர்ச்சி அதிகமாக 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும்.
பிஞ்சு காய்கள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.
எலுமிச்சை சாகுபடி – பயிர் பாதுகாப்பு:-
எலுமிச்சை சாகுபடி முறையில் (lemon cultivation in tamil) எலுமிச்சை மரத்தை இலைதுளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி, பழ அந்துப் பூச்சி, குருத்து துளைப்பான், தண்டு துளைப்பான், பழ ஈ, நூற்புழு ஆகிய பூச்சிக்கள் தாக்கும். இலை துளைப்பானைக் கட்டுப்படுத்த, மானோகுரோட்டோபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 15 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இல்லையெனில், வேப்பங்கொட்டை, பிண்ணாக்கு திரவம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
சாறு உரிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த:
வெள்ளை ஈ:
வெள்ளை ஈக்கு குயினைல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.
கருப்பு ஈ:
கறுப்பு ஈக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
அசுவினி பூச்சிக்கு:
அசுவினி பூச்சிக்கு மானோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
சிவப்பு சிலந்தி பூச்சிக்கு:
சிகப்புச் சிலந்தி பூச்சிக்கு நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
குறுக்குத் துளைப்பான்:
இதை கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ அந்துப் பூச்சிக்கு:
பாத்திகளில் உள்ள டினோஸ்போரா களைகளை அகற்றுதல் வேண்டும். பழங்களை பாலித்தீன் பைகள் கொண்டு மூட வேண்டும்.
தண்டு துளைப்பான்:
புழு தாக்கப்பட்ட கிளைகளை சீர் செய்ய வேண்டும்.
மாதத்துக்கு ஒருமுறை ஊசி மூலம் மானோகுரோட்டோபாஸ் 10 மில்லி அளவில் பூச்சி துளைத்த இடத்தில் செலுத்தி களிமண் கொண்டு மூடவும்.
நூற்புழு:
நூற்புழு பாதித்த ஒரு மரத்தை கார்போபியூரான் 3ஜி 750 கிராம் அளவுக்கு இட்டு இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை:
எலுமிச்சை சாகுபடி முறை (lemon cultivation in tamil) பொறுத்தவரை மேற்கண்ட முறைப்படி பயிரிட்டால் எலுமிச்சை நடப்பட்ட 3-ஆவது வருடம் முதல் டிசம்பர் – பிப்ரவரி, ஜூன்- செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருந்து அறுவடை செய்யலாம்.
இதன்மூலம் விவசாயிகள் அதிக லாபமடைய முடியும்.
முல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.