தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

தர்பூசணி சாகுபடி

தர்பூசணி சாகுபடி முறைகள்..!

உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி, நீர்சத்தை அதிகரிக்கும் பழங்களில் தர்பூசணி சாகுபடி முறைகள் முதலிடத்தை வகிக்கிறது. கோடை காலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழமாகும். தர்பூசணி விவசாயம் செய்து நல்ல லாபம் பெறலாம். அடிக்கும் வெயிலுக்கு தாகத்தை தனிக்கும் அரும்மருந்தாக தர்பூசணி விளங்குகிறது. அதிகமாக நீர்சத்து நிறைந்துள்ளது. இந்த தர்பூசணி அதிக மருத்துவ குணங்களையும் கொண்டது. சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது.

சரி இப்போது தர்பூசணி சாகுபடி முறைகள் (tharpoosani vivasayam) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

 இதையும் படிக்கவும்  சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்

தர்பூசணி விவசாயம் ..!

தர்பூசணி சாகுபடி (watermelon cultivation) – ரசாயனங்கள்:

பி.கே.எம் 1, சுகர்பேபி, அர்காமானிக், டிராகன் கிங், அர்கா ஜோதி, அர்கா ஐஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பொடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய தர்பூசணி இரசாயனங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

தர்பூசணி விவசாயம் :

பொதுவாக தர்பூசணி விளைச்சல் நடைப்பெறும் மாதங்கள் ஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி (tharpoosani vivasayam) நடைப்பெறும் மாதங்கள்.

தர்பூசணி சாகுபடி காலம் :

இந்த தர்பூசணி சாகுபடி முறைக்கு ஜனவரி – மார்ச் சிறந்த சாகுபடி காலம். அனைவராலும் எளிதில் தர்பூசணி சாகுபடி செய்துவிடலாம். இதில் வியாபார பிரச்சனை இல்லை.

திறமையான விவசாயிகள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும் தர்பூசணி சாகுபடி (watermelon cultivation) செய்கிறார்கள். இதற்கு நிழல் வலை, நிலப்போர்வை முறைகளை பின்பற்ற வேண்டும்.

சாகுபடி ஏற்ற – நிலம்:

அங்கச் சத்து நிறைந்த, வடிக்கால் வசதியுள்ள, 6.5 முதல் 7.5 வரை கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் தர்பூசணி சாகுபடிக்கு (watermelon cultivation) ஏற்ற நிலமாகும்.

இதையும் படுக்கவும்  தேனீ வளர்ப்பு – விரிவான விளக்கம் !!!

தர்பூசணி (Watermelon) பயிரிடும் முறை – தர்பூசணி விவசாயம்:

 • தர்பூசணி சாகுபடி: நன்கு உழுது எடுத்து 8 அடி அகலப்பார் அமைக்கவும். பார்களுக்கிடையில் கால் வாய் பிடித்து வைக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ தர்பூசணி விதை தேவைப்படும்.
 • கால்வாயிகளுக்கு இடையில் மூன்று அடி இடைவெளியில் தர்பூசணி விதைகளை விதைக்க வேண்டும்.
 • ஒரு குத்துக்கு இரண்டு செடிகள் இருக்குமாறு, விதைத்த 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.
 • தர்பூசணி விதைகளை ஊன்றும் முன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
 • பின்னர்  வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.
 • சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும்.
 • சொட்டு நீர்ப்பாசனம்  நீர்ப்பயன் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் செய்ய பயன்படுகிறது.

தர்பூசணி சாகுபடி முறைகள்

 • அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.
 • மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து, 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து, 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
 • விதைத்த 30 ஆம் நாள் 22 கிலோ தழைச்சத்து, 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.
 • எத்தரல் வளர்ச்சிக்கு ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மி.லி அளவில் கலந்து, விதைத்த 15 ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒரு முறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கவும்.

தர்பூசணி விவசாயம் – பயிர்ப் பாதுகாப்பு:

 • வண்டுகளை விரட்ட ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி மாலத்தியான், 500 ஈ.சி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 • நன்கு உழவு செய்து பல ஈயில் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

தர்பூசணி விவசாயம் – கருவாட்டுப் பொறி:

 • ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைத்த கருவாடு ஒரு மி.லி டைக்குளோர்வாஸ் நனைத்த பஞ்சை வைத்து கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
 • வாரத்திற்கு இரு முறைகள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை டைக்குளோர் வாஸ் நனைத்த பஞ்சை மாற்ற வேண்டும்.
 • லிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தக் பூசணக் கொல்லிகள் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்க கூடாது.
 • 120 நாள்களில் ஏக்கருக்கு 15 டன் மகசூல் எடுக்கலாம். எனவே விவசாயி இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, தர்பூசணி சாகுபடி (watermelon cultivation) செய்து, சமுதாயத்திற்க்கு உதவுவதுடன் உயர் மகசூலும் உன்னத லாபமும் பெறலாம்.

 

இதையும் படிக்கவும் 

அதிக சத்துகள் மற்றும் வருமானம் உள்ள சாத்துக்குடி சாகுபடி

தர்பூசணியின் பயன்கள்:

கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது.

தர்பூசணியில் வைட்டமின், தாதுக்கள், கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.

கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.

ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com