வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..! – பகுதி – 2

Updated On: February 20, 2026 6:08 PM
Follow Us:
வீட்டு தோட்டம் பராமரிப்பு
---Advertisement---
Advertisement

வீட்டு தோட்டம் பராமரிப்பு ..!

நாம் வீட்டு தோட்டம் பராமரிப்பு முறை பற்றி ஏற்கனவே பகுதி – 1ல் பார்த்தோம். இது அந்த தொடரின் பகுதி – 2 ஆகும். பகுதி – 1 ஜ படிக்க கீழே கிளிக் செய்யவும்.

தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..! – பகுதி – 1

வீட்டு தோட்டம் பராமரிப்பு – முட்டை ஓடு:

முட்டை ஓட்டை தூக்கி எரியாமல் அவற்றை தோட்டத்தில் உரமாக இடுவது மூலம் தோட்டத்தில் இருக்கும் செடிகள் செழுமையாக உதவுகிறது.

உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகள் ஒரு நல்ல உரமாக செயல்படும்.

அவற்றை குப்பையில் தூக்கி எறியாமல் நொறுக்கி மண்ணில் கலந்து விடுங்கள்.

ஏன் நீங்கள் விதைகளைக் கூட முட்டை ஓடுகளில் விதைத்து வளர்க்கலாம்.

உங்கள் விதைக்கு அது ஒரு சிறந்த சத்துமிக்க தொட்டியாக அது இருக்கும்.

ஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா?

வீட்டு தோட்டம் பராமரிப்புகள் – எப்சம் உப்பு:

எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.

வீட்டு தோட்டம் பராமரிப்பு – டயாபர்கள் (diapers):

டயாபர் உரையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும்.

ஆனால் இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.

வீட்டு தோட்டம் பராமரிப்பு – பால் பவுடர்

கொஞ்சம் அநியாயமா தான் தெரியும் இருந்தாலும் பரவாயில்லை செடிகள் நல்லா வளர்துன்ன நாம எத வேணாலும் பயன்படுத்துவோம்.

தக்காளிக்கு இது பெரிதளவில் ஊட்டச்சத்தாக இருப்பதாகப் பலர் கூறுகின்றனர்.

பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம் ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும்.

முயன்று பார்த்து இனிமையான தக்காளிகளைப் பெறுங்களேன். இந்த குறிப்புகள் மிகவும் பலன் தரக்கூடியவை.

வீட்டு தோட்டம் பராமரிப்புகள் – வெள்ளரிக்காய்:

உங்களுக்கு வெள்ளரிக்காய் வழக்கத்தை விட இனிமையாய் இருக்க வேண்டுமா? அப்படியானால் வெள்ளரிச் செடியை சூரியகாந்திச் செடியின் அருகில் வளருங்கள்.

இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான மண் போதுமானது. அதே நேரம் சூரியகாந்திக் கிளைகள் வெள்ளரிக் கொடி ஏற வசதியாக இருக்கும். இதுவும் ஒரு முக்கிய தோட்டக் குறிப்பு.

வீட்டு தோட்டம் பராமரிப்புகள் – சமையல் கழிவு நீர்:

காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைக்குப் பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

ஏனெனில் இவற்றில் பல சத்துக்கள் உள்ளன. இந்த நீரை சூடு ஆறிய பிறகு சேமித்து வைத்து பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு தோட்டக் குறிப்பு.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now