நிலக்கடலை சாகுபடி முறையில் இவ்வளவு வருமானமா ?

நிலக்கடலை சாகுபடி

நிலக்கடலை சாகுபடி முறைகள்:

கடலை சாகுபடி: பொதுவாக நிலக்கடலை மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பருப்பு வகை தாவரமாகும். இவற்றில் அதிகளவு ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் உள்ளது. இன்று உலகளவில் நிலக்கடலை சாகுபடி  (peanut cultivation)முன்னனி நாடாக விளங்கி வருகிறது இந்தியா. முக்கியமாக ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) அதிகமாக செய்யப்படுகிறது.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

சரி இப்போது நிலக்கடலை சாகுபடி முறை (peanut cultivation) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

நிலக்கடலை சாகுபடி எப்படி செய்யலாம்?

இரகங்கள்:

டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ.3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ2, வி.ஆர்.ஐ3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய இரகங்கள் நிலக்கடலை சாகுபடி முறைக்கு ஏற்றவை.

பருவக் காலம்:

ஜுன்-ஜுலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றகாலங்கள் ஆகும்.

மண்:

வண்டல் மண் மற்றும் செம்மன் நிலங்களில் நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) நன்றாக செய்யலாம்.

நிலம் தயாரித்தல்:

 • நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை கோடை கால நிலத்தை நன்றாக குருக்கு உழவு செய்து அவற்றில் உள்ள களைகளை நீக்க வேண்டும்.
 • அவ்வாறு செய்தால் கோடைகால மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது.
 • கோடை மழைக்காலத்தில் சணப்பை போன்ற பயிர் வகைகளை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை பிடுங்கி உழுதும் நிலத்தை தயார் செய்து வைக்க வேண்டும்.
 • செம்மண் பொறுத்த வரை மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கும்.
 • மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும். மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒரு முறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.

விதையளவு:

 • ஒரு ஏக்கருக்கு 125 கிலோ போதுமானது. பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக தேவைப்படும்.

விதைநேர்த்தி:

 • நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கலந்து விதையை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் விதை முளைப்புதிறன் அதிகரிப்பதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கப்படுகிறது.

விதை நேர்த்தி செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 • ஏன் என்றால் விதை நேர்த்தி செய்யும் போது விதை உரையில் பாதிப்பு ஏற்படும் அவ்வாறு ஏற்பட்டால் விதை முளைப்புதிறன் பாதிக்கப்படும்.
 • விதை நேர்த்தி செய்யா விட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட் (800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) அதனுடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

  விதைத்தல்:

 • நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ என்ற இடைவெளி விட்டு விதையை விதைக்க வேண்டும். நிலத்தில் விதைக்கருவிக் கொண்டு விதைப்பதால் குறைந்த நேரத்தில், மண்ணின் ஈரப்பதம் குறைவதற்கு முன் விதைத்து விடலாம்.
 • விதைக்கருவி கொண்டு விதைகளை விதைப்பதனால் சரியான விதை இடைவெளியை கடைப்பிடிக்கலாம்.
 • இவ்வாறு செய்வதனால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.

நீர் பாய்ச்சல்:

 • விதைக்கும் போது மண் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
 • விதைத்த 3-4 நாட்களில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும்.
 • பின்பு மண்ணின் ஈர தன்மையை பொருத்து நீர் பாசனம் செய்ய வேண்டும்.

ஜிப்சம் இடுதல்:

 • நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) முறையில் ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியமாகும்.
 • ஜிப்சத்தில் உள்ள சுண்ணப்பு சத்து மற்றும் கந்தக சத்து ஆகியவை அடங்கி உள்ளது. சுண்ணப்பு சத்து நிலக்கடலை மிகவும் பெரிதாகவும், மிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது.
 • கந்தக சத்து நிலக்கடலையில் எண்ணெய் சத்தை அதிகரிக்க உதவுகிறது.
 • எனவே ஜிப்சத்தை ஏக்கருக்கு 160 கிலோ 40-45 நாட்களில் இட வேண்டும்.

பலே வருமானம் – காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற சில டிப்ஸ்..!

நிலக்கடலை சாகுபடி – பாதுகாப்பு முறை:

களை நிர்வாகம்:

 • நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) மிக அதிக மகசூல் பெற களை நிர்வாகம் மிகவும் அவசியமாகும்.
 • நிலத்தில் உள்ள பயிர்கள் வீணாகுவதை தடுக்கவும், களை எடுப்பதன் மூலம் மண் ஈரபதம் வீரயமாவதை தடுக்கவும், பயிர்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்க மற்றம் பூச்சி நோய்கள் பரவாமல் தடுக்கவும், அதிக விளைச்சல் பெருவதற்கும், களை நிர்வாகம் மிக அவசியமாகும்.
 • விதைத்த 40-ம் நாட்களில் களை நிர்வாகம் மிக அவசியமாகும்.

நிலக்கடலை சாகுபடி – பயிர் பாதுகாப்பு:

சிவப்பு கம்பளிப்புழு:

நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) முறையில் சிகப்புக் கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த குவினால்பாஸ் 2.5 மி.லி, என்.பி.வி.நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக்கரைசல்) மற்றும் 100 மி.லி ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

படைப்புழு மற்றும் வெட்டுப்புழு:

 • படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி அல்லது
  புரோப்பனோபாஸ் 2 மி.லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.
 • அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில் (50 சதம்) நனையும் தூள் 0.5 கிலோ இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
 • இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச்சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
 • என்.பி.வி நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மி.லி என்ற அளவில் வெல்லம் (1.0 கிலோ, ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன் (100 மி.லிஃஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

இலைபேன் மற்றும் அசுவினி:

இலைபேன் மற்றும் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த இமிடகுளோபிரிட் 0.4 மி.லி அல்லது அசிபேட் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

சுருள் பூச்சி:

இந்த பூச்சியை கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி, இமிடகுளோபிரிட் 0.4 மி.லி அல்லது டைமெத்தோயேட் 2 மி.லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வேர் அழுகள் நோய்:

உயிரியல் முறை:

நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை, ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் 1.0 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மணல் இட வேண்டும்.
நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். புரோப்பனோசோல் 2 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அறுவடை நாட்கள்:

 • முதிர்ந்த இலைகள், இலைகள் காய்ந்து விடுதல் அல்லது இலைகள் மஞ்சலாவது ஆகிய அறிகுறிகள் முதிர்ச்சியை குறிக்கும்.
 • கால அளவை பொறுத்து பயிரை கண்கானிப்பது மிக அவசியமாகும்.
 • அதாவது தோராயிரமாக ஒரு சில செடிகளை பிடுங்கி அவற்றில் இருக்கும் கடலையை உடைத்து பார்த்தால் அவற்றில் இருக்கும் கடலை வெள்ளையாக இல்லாமல், பழுத்து அல்லது கருப்பாக இருந்தால் அந்த நிலக்கடலைகள் முதிர்ச்சி நிலையை அடைந்து விட்டது என்று பொருள்.
 • அறுவடைக்கு முன் நீர் பாச்ச வேண்டும். ஏன் என்றால் அப்போதுதான் செடிகளை பிடுங்க மிக சுலபமாக இருக்கும். அறுவடை போது மண் ஈரப்பதமாக இருந்தால் அப்போது நீர் பாசனம் செய்ய வேண்டாம்.
 • பிடுங்கப்பட்ட செடிகள் குவியலாக போடக்கூடாது ஏன் என்றால் ஈரமாக இருக்கும் போது கொடி வகை செடிகள் முளைக்க ஆரம்பித்து விடும்.
 • செடிகளில் இருந்து தனியாக பரிக்கப்பட்ட நிலக்கடலைகள் 5 நாட்கள்  வெயிலில் உலர்த்த வேண்டும்.
 • இவ்வாறு உலர்த்துவன் மூலம் கடலையில் உள்ள ஈரப்பதம் வெளியேற்றப்படுகிறது மற்றும் காயவைத்த நிலக்கடலைக்கு ஈரப்பதம் செல்லாமல் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மகசூல்:

நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை, ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரை நிலக்கடலை கிடைக்கும்.

ஊடுபயிர்கள்:

நிலக்கடலை சாகுபடி (peanut cultivation) பொறுத்தவரை நிலக்கடலை பயிரிடும் போது  ஆவணக்கு, துவரை போன்ற பயிர்களை ஊடுபயிராக இடலாம்.

உளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.