வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பீட்ரூட் சாகுபடி செய்வது எப்படி..?

Updated On: July 6, 2023 11:11 AM
Follow Us:
beetroot sagupadi in tamil
---Advertisement---
Advertisement

Beetroot Sagupadi in Tamil

நாம் நம்முடைய வீட்டில் அல்லது மாடித்தோட்டத்தில் நிறைய வகையான பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகளை வளர்த்து வருவோம். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய முறையில் நாம் பூச்செடிகள் மற்றும் இதர செடிகளை மாடித்தோட்டத்திலேய வளர்த்து வரலாம். ஆனால் ஒரு பயிரினை பயிரிட்டு சாகுபடி செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பயிரினை நாம் சரியான முறையில் பாதுகாத்து வர வேண்டும். அதற்கு முதலில் எவ்வாறு ஒரு பயிரினை சாகுபடி செய்வது என்பதை கற்று கொள்ள வேண்டும். அதனால் இன்று பீட்ரூட் சாகுபடி எவ்வாறு செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை

பீட்ரூட் சாகுபடி செய்வது எப்படி..?

பீட்ரூட்டை பொறுத்தவரை ஒரே ஒரு ரகங்கள் மட்டும் தான் உள்ளது. அதனால் இந்த சாகுபடியில் பெரும்பாலும் குழப்பங்கள் எதுவும் இருக்காது.

பருவகாலம்  நிலம்  தேவைப்படும் விதை அறுவடை காலம்
ஜீலை மற்றும்  ஆகஸ்ட் மாதம்  கரிசல் மண் அல்லது செம்மண்  ஹெக்டேருக்கு 6 கிலோ விதைகள் 60 நாட்கள் 

 

பீட்ரூட் பயிரிடும் முறை:

பீட்ரூட் சாகுபடி முதலில் நீங்கள் பீட்ரூட்டினை பயிரிடுவதற்காக வைத்துள்ள நிலத்திற்கு அடி உரமாக 60 கிலோ தழைச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து, 20 கிலோ மக்கிய தொழு உரம் மற்றும் 160 கிலோ மணிச்சத்து போட்டு நன்றாக நிலத்தினை 4 முதல் 5 முறை 15 செ.மீ முதல் 20 செ.மீ ஆழம் வரை உழுவ வேண்டும்.

 

இவ்வாறு செய்து முடித்த பிறகு 1 முதல் 1 1/2 அடி வரை சரியான முறையில் பார் போட்டுக்கொல்ல வேண்டும். பார் போட்டு முடித்த பிறகு இரண்டு பக்கமும் 4 அங்குலம் என்ற இடைவெளியில் வைத்துள்ள விதைகளை நட வேண்டும்.

நீங்கள் நடவு செய்த முதல் 20-வது நாளில் இருந்து வயல்களில் இருக்கும் களைகளை நீக்கி விட வேண்டும்.

அதற்கு அடுத்தப்படியாக சரியாக விதை விதைத்த நாளில் இருந்து முதல் 25-வது நாளில் இருந்தது நீர் பாய்ச்ச வேண்டும். ஆகவே 3 நாட்களும் ஒரு முறை என்று தவறாமல் நீர் பாய்ச்ச வேண்டும். அதேபோல் பூச்சிகள் எதுவும் செடியினை பாதிக்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அறுவடை நேரம்:

பீட்ரூட்டினை நீங்கள் நடவு செய்து தொடர்ச்சியாக நீர் மற்றும் உரங்களை அளித்து வரும் நிலையில் சரியாக 60-வது நாளில் நீங்கள் பீட்ரூட்டினை அறுவடை செய்து விடலாம். இதற்க்கான சரியான பதத்தில் காய்கள் அனைத்தும் அழுகிய நிலைக்கு வராத முன்பே அறுவடை செய்து விடுவது நல்லது.

மேலும் தோராயமாக 1 ஹெக்டருக்கு 20 முதல் 25 டன்கள் வரை மகசூல் பெறலாம்.

எளிய முறையில் சாமை பயிரிடுதல் பற்றி தெரியுமா 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now