வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மண்ணின் வகைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..! | Types of Soil in Tamil

Updated On: February 12, 2026 5:47 PM
Follow Us:
Types of Soil in Tamil
---Advertisement---
Advertisement

மண்ணின் வகைகள் | Mannin Vagaigal | Types of Soil in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் மண் வகைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். மண் என்பது பலவகை கரிம பொருட்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருட்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவை ஆகும். இந்த மண் புவியின் மேல் உருவாக்குவதால் இது புவியின் தோல் எனப்படுகிறது.

பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைக்கு உட்படுத்தும் பொழுது மண்ணாக உருவாக்கப்படுகிறது. இத்தகைய மண்ணில் கனிமம் 45%, கரிமப்பொருட்கள் 5%, காற்று 25%, நீர் 25% போன்ற கூட்டு பொருட்களை கொண்டுள்ளது. மண்ணை பற்றி இன்னும் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி இன்றைய பதிவில் மண்ணின் வகைகள் மற்றும் அதன் தன்மைகள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மண்ணின் வகைகள் | Types of Soil in Tamil:

வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண், மலை மண், பாலை மண் என ஆறு வகைப்படும்.

  • வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரை சமவெளிகளில் காணப்படும்.
  • கரிசல் மண் தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • செம்மண் உருமாறிய பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது.
  • சரளை மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது.
  • மலைமண் மலைச்சரிவுகளில் காணப்படுகிறது.
  • பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.

வண்டல் மண்:

வண்டல் மண் மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி, கொடி, தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை விவசாயத்திற்கு மிகவும் சிறந்ததாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமாரி மாவட்டங்களில் வண்டல் மண் காணப்படுகிறது. சோளம், கரும்பு, கம்பு, நெல், மிளகாய், கோதுமை, ராகி, வாழை, மஞ்சள் போன்றவை இந்த மண்ணில் பயிரிடப்படுகிறது.

கரிசல் மண்:

கரிசல் மண் என்பது ஒரு வகையான மண், இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது. கரிசல் மண் கோவை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற இடங்களில் காணப்படுகிறது.

செம்மண்:

இதுவும் ஒரு மண் வகை தான் இது பொதுவாக சிவப்பு நின்றதில் இருக்கும். செம்மண்ணில் சோளம், கம்பு, கேரட், பீட்ருட் கிழங்குகள் பயிரிடப்படுகிறது. இந்த செம்மண் தமிழ் நாட்டில் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

சரளை மண்:

சரளை மண் மலைப் பிரதேசங்களில் காணப்படுகின்றது. இந்த மண்ணை துருக்கள் மண் என்றும் சொல்வார்கள். இந்த மண்ணில் பூக்கள், வேர்க்கடலை, நெல், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற திணைவகை பயிர்கள் நன்றாக வளரக் கூடியவை. தமிழ்நாட்டில் திருவள்ளுர் திருவள்ளுர், நீலகிரி, தருமபுரி, வேலூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

பாலை மண்:

பாலை மண் கடற்கரை ஓரங்களிலும் பாலைவனங்களிலும் காணப்படுகிறது. இந்த மண்ணில் பயிரகள் பயிரிட முடியாது. இந்த மண்ணில் உப்பு மற்றும் கருவாடு போன்றவற்றை உலர்த்த மட்டுமே இந்த மண் பயன்படும்.

மலை மண்:

மலை மண் பொறுத்தவரை பனிமலை வெப்பநிலை வேறுபாடுகளால்பௌதிக சிதைவின் காரணமாக உருவாகிறது. காலநிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த மண்ணில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகிறது. இந்த மண்ணிலும் சில வகையான பயிர்களை விவசாயம் செய்யலாம்.

நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள் 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Malligai Plant Growing Faster in Tamil

ஒரே ஒரு வாழைக்காய் போதும்.. பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்..!

Maavu Poochi Viratta Tips in Tamil

செடிகளில் உள்ள மாவுப்பூச்சியை நிரந்தரமாக போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பலாப்பழம் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

முலாம்பழம் சாகுபடி

கோடைகால முலாம்பழம் சாகுபடி – நல்ல வருமானம் கொடுக்கும்

ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் சாகுபடி எப்படி செய்வது.? மற்றும் ஜாதிக்காய் பயன்கள்..!

Paneer Rose Plant Growing Tips

பன்னீர் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூ பூக்க உரம்..! Paneer Rose Plant Growing Tips..!

Aloe Vera To Grow Faster Fertilizer in Tamil

இந்த வெயில் காலத்திலும் கற்றாழை செடி தளதளன்னு வளர இந்த தண்ணீர் போதும்..!

summer care of rose plant in tamil

வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!