மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!Malligai Poo Valarpu in Tamil..!

மல்லிகை பூ சாகுபடி

மல்லி பூ சாகுபடி முறை (Jasmine Flower Cultivation):

Malligai poo valarpu in tamil: நெல் சாகுபடியை விட, மலர் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக, மல்லிகை பயிரிடும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகை வகைகள் இரண்டு வகையில் உள்ளது. அவை சாதாரண மல்லி பூ மற்றும் குண்டுமல்லி பூ. இவை ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். அதுவும் ஜூன் முதல் நவம்பர் மாதங்கள் மட்டுமே நடவு செய்யலாம். சரி இப்போது மல்லிகை பூ சாகுபடி முறை (malligai poo vivasayam) பற்றி தெளிவாக படித்தறிவோம்.

இதையும் படிக்கவும் செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

 

மல்லிகை பூ சாகுபடி

மல்லிகை பூ செடி வளர்ப்பது எப்படி..?

மல்லிகை பூ சாகுபடி முறைகள் (Jasmine Flower Cultivation):

30 செ.மீ-க்கு, 30 செ.மீ என்ற அளவில் குழி வெட்ட வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடிக்கு தேவையான உரம் (Jasmine Flower Types):

மல்லிகை பூ அதிகம் பூக்க: செடிக்கு உரமாக 10 கிலோ சாணமும், தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தில் காவந்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் உரமாக இட வேண்டும். நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடிக்கு தேவையான பூச்சிக்கொல்லி:

மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த:

மல்லிகை பூ சாகுபடி முறையில் (malligai poo vivasayam) மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மோனோகுரோமோட்டோபாஸ் ஒரு லீட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

இதையும் படிக்கவும் கனகாம்பர பூக்கள் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

சிவப்பு முரணை நோய்

மல்லிகை பூ சாகுபடி (malligai poo vivasayam) முறையில்  சிவப்பு முரணை நோயை கட்டுப்படுத்தும் டைகோபால் 2.5 மில்லி:1.0 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நூர்புழுவை கட்டுப்படுத்த:

மல்லிகை பூ சாகுபடி முறையில் (Jasmine Flower Cultivation) நூர்புழுவை கட்டுப்படுத்த டெமிக் குருணைகள் 10 கிராம் அளவில் செடி பகுதியில் தெளிக்க வேண்டும்.

வேர் அளவுகள் நோயை கட்டுப்படுத்த:

மல்லிகை பூ சாகுபடி முறையில் (malligai poo vivasayam) வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியை சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.

அரும்பு பற்றாக்குறைகளுக்கு:

மல்லிகை பூ சாகுபடி முறையில் (Jasmine Flower Cultivation) அரும்பு பற்றாக்குறை இருந்தால் இலைகளின் ஓரங்கள் வெளுத்தும், மஞ்சளாகவும் காணப்படும், அரும்பு சல்பேட் 5 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஓட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

மல்லிகை பூ சாகுபடி (Malligai Poo Vivasayam) முறையில் அறுவடை:

மல்லி பூ மார்ச், ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். ஏக்கருக்கு 8 ஆயிரத்துக்கு 750 கிலோ மலர்கள் கிடைக்கும். 300 மைக்ரான் பாலிதீன் பையில் பூக்களை பறித்து வைத்தால், 72 மணி நேரம் வரை பூக்கள் மலராமல் இருக்கும்.

மல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்:

மல்லிகை பூவின் பயன்கள் – வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிய:

மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

மல்லிகை பூவின் பயன்கள் – வயிற்று புண் சரியாக:

வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

மல்லிகை பூவின் பயன்கள் – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் (malligai poo vivasayam) ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.

இதையும் படிக்கவும் ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..!