மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!

Advertisement

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!

உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்வது எப்படி பராமரிக்கும் முறையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் நாம் படித்தறிவோம் வாங்க..!

மாடித்தோட்டம் நெல்லிக்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி

மாடி தோட்டம் அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்:

  • Grow bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண்,
  • வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • நாற்றுகள் அல்லது விதைகள்.
  • சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்.

தொட்டிகளாக:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு தொட்டிகளுக்கென்று அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.

7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

லாபம் அள்ளி தரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி ..!

விதை விதைத்தல்:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு நன்கு முற்றிய கத்தரியில் விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்ய வேண்டும்.

நீர் பாசனம்:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறையில் விதை விதைத்த பின் அல்லது நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி முறையில் செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.

இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.

இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

கத்தரிக்காய் சாகுபடி – பயிர் பாதுகாப்பு முறை:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி பொறுத்தவரை வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண் கொத்திவிட வேண்டும்.

மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும்.

செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.

இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகாவ்யா அளிக்க வேண்டும்.

முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் நீக்கினால் நோய் தாக்குதல் இருக்காது.

அறுவடை:

மாடித்தோட்டம் கத்தரிக்காய் சாகுபடி காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:

கத்தரிக்காய் பயன்கள் :1

கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6, தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கத்தரிக்காய் பயன்கள் :2

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.

கத்தரிக்காய் பயன்கள் :3

வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.

கத்தரிக்காய் பயன்கள் :4

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement