மாடித்தோட்டம் தக்காளி சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!

தக்காளி சாகுபடி

மாடித்தோட்டம் தக்காளி சாகுபடி முறை ..!

உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் (Maadi thottam) அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி என்றும், பராமரிக்கும் முறையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் காண்போம்.

மாடித் தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி மற்றும் பயன்கள் !!!

 தொட்டிகள்:

மாடித்தோட்டம் தக்காளி சாகுபடி பொறுத்தவரை எந்த ஒரு அளவு மற்றும் வடிவமைப்பும் தேவை இல்லை. எனவே பிளாஸ்டிக் டப்பா, மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தொட்டியில் மணல் நிரப்பும் முறை:

மாடித்தோட்டம் (Maadi thottam) தக்காளி சாகுபடி பொறுத்தவரை செடிகள் வளர்ப்பதற்காக தொட்டியில் மணல் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதை விதைக்கும் முறை:

மாடித்தோட்டம் (Maadi thottam) தக்காளி சாகுபடி பொறுத்தவரை நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரிந்து விடும்.

பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்.

இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து 20 முதல் 25 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்யலாம். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.

நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்:

மாடித்தோட்டம் (Maadi thottam) தக்காளி சாகுபடி பொறுத்தவரை பூச்சிகளிடமிருந்து செடிகளை காக்க சமையலறை குப்பைகளில் இருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

பின்பு மாதம் ஒரு முறை வேப்ப எண்ணெயை செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும்.

இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

மாடித் தோட்டம் – கொத்தமல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

செடி பாதுகாப்பு முறை:

மாடித்தோட்டம் (Maadi thottam) தக்காளி சாகுபடி பொறுத்தவரை வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.

தக்காளி நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.

மாடித் தோட்டம் தக்காளி – அறுவடை:

மாடித்தோட்டம் தக்காளி சாகுபடி பொறுத்தவரை நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

இதுவரை தக்காளி சாகுபடி முறையை பற்றி தெரிந்து கொண்டோம் சரி வாங்க இப்போது தக்காளி பயன்கள் சிலவற்றை படித்தறிவோம்.

தக்காளி பயன்கள் (Tomato benefits):1

ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும், ரத்த உற்பத்திக்கும் தக்காளி உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.

தக்காளி பயன்கள் (Tomato benefits):2

தக்காளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

சருமத்தை பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி உதவுகிறது.

தக்காளி பயன்கள் (Tomato benefits):3

தினமும்  தக்காளி ஜூஸை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும் போது முகம் பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைய தொடங்கும்.

தக்காளி பயன்கள் (Tomato benefits):4

தினமும் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சாப்பிடுவதால் உடல்பருமனை குறைக்கலாம். உடலுக்கு வளத்தையும், பலத்தையும் தரும் ஆற்றல் உடையது.

வீட்டில் காய்கறித் தோட்டம் வளர்ப்பது அவசியமா? வாங்க அதைபத்தி தெரிஞ்சிக்கலாம் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.