மாடித்தோட்டம் புடலங்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

மாடிதோட்டத்தில் புடலங்காய்

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation)..!

வணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக புடலங்காய் சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  • Grow Bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
  • விதைகள்.
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.
  • பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.

மாடியில் புடலங்காய் பயிரிடுவோம் வாங்க:

மாடித்தோட்டம் தொட்டிகள்:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி முறைகள் (Snake Gourd Cultivation) பொறுத்தவரை தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பலாம்.

இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

விதை விதைக்கும் முறை:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை (Snake Gourd Cultivation) நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 5 விதைகள் வரை ஊன்றலாம்.

நீர் நிர்வாகம்:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்பு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.

பந்தல் அமைக்கும் முறை:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி (Snake Gourd Cultivation) பொறுத்தவரை மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.

அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது.

பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை  குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும்.

இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.

சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை..! முழு விளக்கம்

உரங்கள்:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும்.

இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பயிர் பாதுகாப்பு முறை:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு எதுவாக இருக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும்.

பஞ்சகாவ்யா

இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.

அறுவடை காலம்:

மாடித்தோட்டம் புடலங்காய் சாகுபடி பொறுத்தவரை இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்ந்த செடிகளை நீக்கிவிட்டு அதன் இலைகளை அதே தொட்டியில் உரமாக இட்டு மறுபயிருக்கு பயன்படுத்தலாம்.

காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இரு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.

புடலங்காய் மருத்துவ பயன்கள்:

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 1

இந்த புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய், இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 2

தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 3

அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் ஜீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 4

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 5

மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 6

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும்.

புடலங்காய் பயன்கள் (Snake Gourd Benefits): 7

இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை கொண்டது.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்