ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது?

rose plant

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ்..!

ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், கண்டிப்பா இந்த டிப்ஸை நீங்கள் உங்கள் ரோஸ் செடிக்கு ஒரு முறை செய்து பார்த்தால் போதும். அப்பறம் நீங்க கடைக்கு சென்று ரோஸ் பூ வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் ரோஸ் செடியில் (rose plant) அதிக பூக்கள் பூத்து குலுங்கும்.

சரி வாங்க நம் விட்டு ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது என்று பார்ப்போம்.

newமல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..!

 

ரோஸ் செடியை (rose plant) பூத்து குலுங்கவைப்பதற்கு இயற்கை டானிக்கை தான் செய்ய போகிறோம், இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன, எப்படி தயாரிப்பது என்பதை இப்போது நாம் காண்போம்.

ரோஸ் பூக்கள் அதிகம் பூக்க – தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 1/2 லிட்டர்
  2. வாழைப்பழம் தோல் – 3 (பொடிதாக நறுக்கி கொள்ளவும்)
  3. காபி தூள் – 1 ஸ்பூன்
  4. டீ தூள் – 3 ஸ்பூன்
  5. தயிர் – 1/2 கப்
ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..! Rose Plant Care in Tamil..!

பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது – செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக, கொதிக்க வைத்து கொள்ளவும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும், அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் 1 ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும்.

இந்த கலவை நன்றாக கொதித்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பின்பு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, 1/2 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

கலவையை நன்றாக கலந்த பிறகு ஒரு தட்டை கொண்டு காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடிவிடவும்.

பின்பு 24 மணி வரை காத்திருந்து மறுநாள் காலையில் இந்த டானிக்கை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

இந்த இயற்கை டானிக்கில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் ரோஸ் செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வர உங்கள் ரோஸ் செடியில் அதிக பூக்கள் பிடிக்க ஆரமித்து விடும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

இந்த குறிப்பு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கூறி பயன்பெற செய்யவும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்