மிகவும் எளிமையாக உங்கள் வீட்டு மாடியில் பட்டாணி பயிரிடலாம்

Advertisement

மாடித்தோட்டம் பச்சை பட்டாணி வளர்க்கும் முறை 

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் மாடித்தோட்டத்தில் பச்சை பட்டாணி எப்படி பயிரிடுவது என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக நாம் கடைகளில் வாங்கி காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட, நம் வீட்டில் முளைக்க வைத்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோசத்தை தரும். இவை சந்தோசத்தை தருவதைவிட,  இதை இயற்கை முறையில் எந்த ஒரு வேதிப்பொருள்களும் கலக்காமல்  சாப்பிடுவதால், உடலுக்கு பல ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் இவற்றை எப்படி எளிதாக உங்கள் வீட்டு மாடியில் பயிரிடுவது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

மாடித்தோட்டம் வெண்டைக்காய் சாகுபடி முறை..!

 தொட்டிகள் அமைக்கும் முறை:

பச்சை பட்டாணியை பயிரிடுவதற்கு முன்பு, அதற்கு தொட்டி அமைப்பது மிகவும் அவசியம், அந்த வகையில் உங்களிடம் Grow bag (அல்லது) அகலமான தொட்டி இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.  பொதுவாக பட்டாணியின்  வேர்கள் ஆழமாக போகாது, ஆகையால் நீங்கள்  தொட்டியில் அதிகமாக மண் சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை.  அதாவது நீங்கள் 9 அல்லது 10 இன்ச் அளவு கொண்ட  Grow bag எடுத்துக் கொண்டு, அதில் பாதி, 5 இன்ச் அளவு வரையும் மண் சேர்த்தால் போதும். 

பச்சை பட்டாணி பயிரிடும் முறை:

பச்சை பட்டாணி சாகுபடி

பச்சை பட்டாணியை பயிரிடுவதற்கு, உங்களுக்கு பச்சை பட்டாணி தேவைப்படுகிறது,  உங்களிடம் காய்ந்த பச்சை பட்டாணி இருந்தாலும் அதையும் எடுத்துக் கொள்ளலாம்.  உங்களிடம் காய்ந்த பச்சை பட்டாணி இருந்தால், அதை எடுத்துக்கொண்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும், ஊறவைத்த பச்சை பட்டாணியை  தண்ணீரில் இருந்து வடிக்கட்டி கொண்டு, ஒரு காட்டன் துணியில்  முடிந்து வைக்க வேண்டும். ஒரு இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் அவை முளை  விட்டு வந்திருக்கும்.

முளைவிட்டு வந்த பச்சை பட்டாணியை எடுத்து கொண்டு, நீங்கள் தயார் செய்த தொட்டியில்  அந்த முளைகட்டிய பட்டாணியை விதைக்க வேண்டியது தான், ஒரு பட்டாணியை விதைத்த பிறகு 4 அல்லது 5 இன்ச் இடம் விட்டு அடுத்த பட்டாணியை விதைக்க வேண்டும். 

முக்கியமாக  👉  நீங்கள் பட்டாணியை விதைக்கும் பொழுது முளை மேல் இருக்கும்படி விதைக்க வேண்டும், விதைத்த பிறகு மண்ணை லேசாக வைத்து மூடினாலே போதும்.  மண்ணை போட்டு மூடியதும், அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

மாடித்தோட்டத்தில் முட்டைகோஸை சுலபமாக பயிரிடும் முறை

பச்சை பட்டாணி வளர்ப்பு:

பச்சை பட்டாணி வளர்ப்பு

பச்சை பட்டாணி ஆரோக்கியமாக எந்த விதமான பூச்சிகளும் இல்லாமல் வளர வேண்டும் என்றால், காய்ந்து போன மாட்டு சாணியை அந்த தொட்டியில்  கொஞ்சமாக மண்ணில்  சேர்த்து மேலோட்டமாக கிளறிவிட்டால் போதும், பட்டாணி செடி நன்றாக வளரும். மேலும் காய்கறி கழிவுகள் மற்றும் அரிசி, பருப்பு கழுவிய தண்ணீரை அதில் தினமும்  சேர்ப்பதன் மூலம்  செடிகள் பூச்சி தொல்லை எதுவுமில்லாமல் ஆரோக்கியமாக வளரும்.   

பச்சை பட்டாணி அறுவடை:

பச்சை பட்டாணி சாகுபடி

பட்டாணி செடிகள் பொதுவாக 35 அல்லது 40 நாட்களில் பூ முளைக்க தொடங்கி விடும். பட்டாணி செடிகளை 60 அல்லது 70 நாட்களில் அதிகமாக வளர்ந்து விடும்.  இந்த செடிகள் வளர்ந்த பிறகு சரியாக 80  ஆவது நாட்களில் நீங்கள் அறுவடை செய்து விடலாம். நீங்கள் அறுவடை செய்யும் பொழுது ஒரு கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும்  இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.
Advertisement