மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

காலிஃபிளவர் சாகுபடி

மாடித்தோட்டத்தில் இன்று காலிஃபிளவர் சாகுபடி

பொதுவாக நம் மாடித்தோட்டத்தில் பலவகையான பயிர்களை பயிரிடுவது எதற்காக ? நம் அத்தியாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ள மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் நம் மாடித்தோட்டத்தில் பயிரிடுவதால் நமக்கு எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்குத்தான். பொதுவாக நாம், நம் மாடித்தோட்டத்தில் பலவகையான பயிர்களை பயிரிடுகின்றோம். அந்த வகையில் இன்று நம் மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை பற்றி தெளிவாக காண்போம்.

சரி வாங்க இன்று மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் சாகுபடி எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. Grow Bags அல்லது Thotti
  2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  3. நாற்றுகளை உருவாக்குவதற்கான குழித்தட்டுகள்
  4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள் தேர்ந்தடுக்கும் முறை:

தேர்ந்தெடுக்கப்படும் பை அல்லது தொட்டிகளானது 10 கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தொட்டிகளில் 8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

நாற்றுகளை உருவாக்குவதற்கு குழி தட்டில் தென்னை நார்க் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். துளைகள் இல்லையென்றால் அவற்றில் ஒரு துளை இடவும்.

தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!

காலிஃபிளவர் சாகுபடி முறைக்கு ஏற்ற பருவகாலம்:

ஆகஸ்ட் – செப்டம்பர், டிசம்பர் – ஜனவரி வரையுள்ள காலம் பயிர் செய்ய ஏற்றது.

விதைக்கும் முறை:

காலிஃபிளவர் பயிரிடுவதற்கு முதலில் தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்:

நாற்றுகளை நடவுசெய்த உடன் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் உரங்கள்:

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

காலிஃபிளவர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு முறைகள்:

வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதனை வலை கட்டி வளர்க்கலாம். இவ்வாறு வலை கட்டுவதால் சூரிய ஒளியானது குறைந்த அளவே படும். முழுவதும் நிழல்பாங்கான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பஞ்சக்காவ்யா உரத்தை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்.

இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அறுவடை:

நடவு செய்த 120 நாட்களில் காலிஃபிளவர் காய்களை அறுவடை செய்யலாம்.

தற்போது காலிஃபிளவர் சாகுபடி முறையை பற்றி பார்த்தோம், இப்போது காலிஃபிளவர் பயன்கள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!

காலிஃபிளவர் பயன்கள்:

  1. காலிஃபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. அதேபோல் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  2. வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
  3. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது.
  4. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.
  5. செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.
  6. காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை தயாரிக்கலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

SHARE