மாடித்தோட்டம் – கொத்தமல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

Advertisement

மாடித்தோட்டம் – கொத்தமல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

அனைவருமே தினமும் பயன்படுத்தும் காய்கறிகளை தங்களது மாடியில் அல்லது தங்களது தோட்டத்தில் பயிரிடலாம். இதன் மூலம் நமக்கு சுத்தமான காய்கறிகள் கிடைக்கின்றது. அதுமட்டுமின்றி நம்வீட்டில் தோட்டம் அமைத்து அவற்றை பராமரிக்கும் போது மன அமைதி கிடைக்கும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

சரி வாருங்கள் இன்று மாடித்தோட்டத்தில் கொத்தமல்லி சாகுபடி எப்படி செய்யலாம் என்பதை காண்போம்..!

மாடித்தோட்டம் கொத்தமல்லி சாகுபடி முறை

மாடி தோட்டம் அமைக்கும் முறை – தொட்டியில் மண் நிரப்பும் முறை :-

மாடித்தோட்டம் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) முறையில் தொட்டி அல்லது பைகளுக்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது.
எனவே பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் மண் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் மண் நிரப்பினால் போதுமானது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

மாடி தோட்டம் அமைக்கும் முறை – விதை விதைக்கும் முறை :-

மாடித்தோட்டம் கொத்தமல்லி விதை சாகுபடி (coriander cultivation) பொறுத்தவரை விதைகளை பைகளில் தூவி கிளறி விட வேண்டும்.

இதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும்.

கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து தான் விதைக்க வேண்டும். இல்லையெனில் விதைகள் முளைக்காது.

மாடி தோட்டம் அமைக்கும் முறை – நீர் நிர்வாகம் :-

மாடித்தோட்டம் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) பொறுத்தவரை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

மாடி தோட்டம் அமைக்கும் முறை – உரமிடுதல் :-

மாடி தோட்டத்தில் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) செய்த பின் பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பை மற்றும் பஞ்சகாவ்யா போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

மாடி தோட்டம் அமைக்கும் முறை – அறுவடை :-

மாடி தோட்டத்தில் கொத்தமல்லி சாகுபடி (coriander cultivation) செய்த பின் நன்கு வளர்ந்த கொத்தமல்லிக் கீரையை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!

மாடி தோட்டம் அமைக்கும் முறை – கொத்தமல்லியின் நன்மைகள் :-

கொத்தமல்லிக் கீரையை தினமும் சாப்பிட இந்த கீரையில் உள்ள விட்டமின் A சத்து கண்பார்வை தெளிவாகும்.

கொத்தமல்லியில் அதிகளவு விட்டமின் C சத்து உள்ளதால் சொறி, தேமல், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

கொத்தமல்லி கீரையை தினமும் சாப்பிட்டு வர செரிமானம் அடைவதற்கு உதவுகிறது.மேலும் வாந்தி மற்றும் விக்கலை தடுக்கும்.

கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான அளவு கால்சியம் சத்து இவற்றில் உள்ளது.

காய்ச்சலின் காரணமாக நாக்கின் சுவை மாறி நாக்கு கசப்பாக இருக்கும் அப்போது இந்த கொத்தமல்லி கீரையை துவையலறைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை சரியாகும்.

சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொண்டு இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

கொத்தமல்லி கீரை பசியை தூண்டும் தன்மை வாய்ந்தது.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

இந்த கொத்தமல்லிக் கீரையை கொஞ்சம் எடுத்து எண்ணெயில் வதக்கி சூட்டு கட்டிகள் உள்ள இடத்தில் மிதமான சூட்டில் கட்டினால் சூட்டுக் கட்டிகள் குணமாகும்.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.

உங்கள் மாடிதோட்டத்தில் இன்று ரோஜா பயிரிடலாம் வாங்க…!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement