வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..!

Updated On: February 11, 2023 12:53 PM
Follow Us:
மாடி தோட்டம்
---Advertisement---
Advertisement

மாடி தோட்டம் பராமரிப்பு..!

இப்போது பலரும் தனது வீட்டில் மாடி தோட்டம்(Maadi Thottam), அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், இருப்பினும் மாடி தோட்டம் அமைக்கும் போது குறிப்பாக செய்கின்ற ஐந்து தவறுகளினால், மாடி தோட்டத்தில் நாம் ஆசைப்பட்டு வைக்கும் அனைத்து செடிகளும் செழிப்பாக வளர்வது இல்லை. அப்படி என்ன 5 தவறை நாம் செய்து வருகின்றோம் என்பதையும், அவற்றை எப்படி தவிர்த்து கொள்ளலாம் என்பதையும் இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam)1:

நாம் மாடி தோட்டம் வைக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி, செடியை நட்டு வைத்து விடுவோம். இவ்வாறு இனி எப்போதும் செய்யாதீர்கள் இதுதான் நாம் செய்கின்ற முதல் தவறாகும்.

மண்ணில் சில இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். அதாவது, மண்ணில் மக்கக்கூடிய பொருட்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும்.

அதன் பிறகு விதைகளை விதைக்கவும் அல்லது செடிகளை நடவும். இது தான் சரியான முறை இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 2:

மாடி தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது சிலர் தொட்டிகள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு செய்வது மிகமிக தவறான செயலாகும். இதுவே நாம் செய்யுகின்ற இரண்டாவது தவறாகும்.

எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் தான் ஊற்ற விடும். அதிகளவு தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 3:

அதேபோல் செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றும் முறை மிகவும் நல்லது. பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி மிக விரைவில் கருகிவிடும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 4:

மாடி தோட்டத்தை அமைப்போம் ஆனால் அமைத்த தோட்டத்தை ஒழுங்காக பராமரிக்க மாட்டோம். அதனால் செடிகளில் எளிதாக பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எனவே மாடி தோட்டத்தை தினமும் பராமரிக்க நேரம் இல்லாவிட்டாலும். வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

அதாவது வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம்பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளித்துவிடுங்கள். இவ்வாறு செய்வதினால், பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 5:

செடிகளின் தன்மையை தெரிந்து செடிகளை சரியான தட்பவெப்ப நிலையுள்ள இடத்தில வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதாவது ஒரு சில தாவரங்கள் வறட்ச்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும்.

எனவே மாடித்தோட்டத்தில் வைக்கும் தாவரத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொண்டு செடிகளை சரியான இடத்தில் வைக்கவும்.

சரி இது போன்ற (Maadi Thottam) மாடி தோட்டம் டிப்ஸ், மற்றும் மாடி தோட்டத்தில் என்னென்ன பயிர்களை பயிரிடலாம், அவற்றை எப்படி பயிரிடலாம் என்ற சந்தேகங்களுக்கு, இதோ மாடித்தோட்டம் குறித்த முழு விவரங்களையும் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதை படித்து பயன்பெறுங்கள் நண்பர்களே..!

மாடித்தோட்டம் குறித்த முழு விவரங்கள்..!
1. உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?
2. உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? பகுதி -2
3. மாடித்தோட்டம் – தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!
4. மாடித்தோட்டம் – தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ் பகுதி 2..!
5. மாடித்தோட்டத்தில் – மக்காச்சோளம் பயிரிடும் முறை..!
6. மாடித்தோட்டத்தில் – நெல்லிக்காய் பயிரிடும் முறை..!
7. ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try…
8. மாடித்தோட்டத்தில் – விளையும் திராட்சை கொடி..!
9. மாடித்தோட்டத்தில் –  அவரைக்காய் பயிரிடுவோமா..!
10 மாடித்தோட்டத்தில் – புடலங்காய் பயிரிடும் முறை..!
11 மாடித்தோட்டம் உருளைக் கிழங்கு பயிரிடும் முறை..!
12. மாடித்தோட்டத்தில் – காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!
13. மாடித்தோட்டத்தில் – தக்காளி பயிரிடும் முறை
14. மாடித்தோட்டத்தில் – ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!
15. மாடித்தோட்டத்தில் – ஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா?
16. மாடித்தோட்டத்தில் – சிறுகுறிஞ்சான் எப்படி பயிரிடுவது..?
17. மொட்டைமாடியில் கத்தரிக்காய் பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!
18. மாடிதோட்டத்தில் – கருவேப்பிலை பயிரிடலாம் வாங்க..!

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now