பிரம்ம கமலம் செடி வளர்ப்பு
இன்றைய பதிவில் மாடித்தோட்டத்தில் பிரம்மகமலம் பூ செடி வளர்ப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். பிரம்ம கமலம் செடியானது இமையமலை பகுதிகளில் வளரக்கூடிய ஒரு செடியாகும். இந்த வகை செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். பிரம்ம கமலம் செடி சுமார் 5 முதல் 10 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய செடியாகும். இது ஒருவகையான ஹெர்மாஃப்ரோடைட் மூலிகை செடி ஆகும். இது அதிக விலை உயர்ந்த செடியாகும். பிரம்ம கமலம் செடி விஷ்ணு மற்றும் சிவனுக்கு சாற்றப்படும் ஆன்மிக மலராகும். இந்த செடி இரவில் பூத்து காலையில் உதிரும் தன்மையை உடையது.
மேலும், இந்த வகை செடிக்கு அறிவியலில் சௌசுரிய ஒப்வல்லட்டா என்ற மற்றோரு பெயரும் உண்டு. இது அதிகமாக இந்திய, பூட்டான்,நேபாளம், பாகிஸ்தான்,சீனா மற்றும் இமயமலை பகுதிகளில் காணப்படும். இந்த பூவில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பிரம்ம கமலம் ஒரு புனித மலராக கருதப்படுகிறது. இன்றைய பதிவில் இந்தவகை செடி வளர்க்கும் முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…
தொட்டிகள் :

மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி செய்ய செம்மண் ஒரு பங்கு தேவை. நீங்கள் அதை ஒரு பக்கெட்டில் வைத்தால் அதில் வடிகால் வசதிக்கு துளைகள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.இதில் செம்மண் உடன் தென்னை நார்க்கழிவு மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை சமமாக கலந்து வைக்க வேண்டும்.
பிரம்ம கமலம் செடி கிடைக்கும் இடம்:
பிரம்ம கமலம் செடி நர்சரி கார்டன் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் விற்பனை செய்யபடுகின்றன. மேலும், இந்த வகை செடிகளை உள்ளூர் மக்கள் விற்பனை செய்வதையும் பார்க்கலாம்.
விதைத்தல்:
மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி பொறுத்தவரை செடியை மையத்தில் நடவு செய்ய வேண்டும். அகலமானதாக இருந்தால் இரண்டு செடிகள் வரை நடவு செய்யலாம்.
நீர் பாசனம்:
பிரம்ம கமலம் ஒரு சதைப்பற்றுள்ள தாவர செடியாகும். இந்த வகை செடிக்கு அதிகம் தண்ணீர் தேவைபடாது. வாரம் 3 முறை மட்டும் மண்ணின் தன்மையை பொறுத்து தாவரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடியில் தண்ணீர் தேங்க விடாமல் வடிகால் வசதி செய்யுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். பிரம்ம கமலம் செடியை சூரிய ஒளி படாமல் மறைமுகமாக வளர்க்க வேண்டும்.
மாடித்தோட்டம் சம்பங்கி சாகுபடி முறை மற்றும் சம்பங்கி பயன்கள்..!
உரங்கள்:
பிரம்ம கமலம் செடிக்கு மண்புழு உரம், மாட்டு சாணம் மற்றும் DAP, சமையலுக்கு பயன்படுத்தும் கழிவுகள் போன்ற உரங்களை மாதம் ஒரு முறை அளிப்பதன் மூலம் செடியின் ஆரோக்கியதிற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நோய் தாக்குதல் :
பிரம்ம கமலம் செடியில் மாவு பூச்சி , அஃபிட்ஸ் போன்றவற்றில் இருந்து செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் செடியை பாதுகாக்க முடியும்.
பூக்கும் காலம்:
பிரம்ம கமலம் செடி மழைக்காலத்தில் பூக்ககூடிய தாவரமாகும். இது ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த வகை பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் செடி இரவில் பூத்து காலையில் உதிரும் தன்மையை கொண்டுள்ளது. இந்த பூ பூக்கும்போது அதிக நறுமணத்தை கொண்டிருக்கும். பிரம்ம கமலம் மொட்டுக்கள் விரிய சுமார் 2 மற்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது.
| இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம். |














