மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!

மாதுளை சாகுபடி

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!

வணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் மாதுளை சாகுபடி முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக மாதுளை சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!

தொட்டிகள்:

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை தொட்டிகளை வைப்பதற்கு முன் சிறு கற்களை நிரப்பி பின்பு அதன் மீது தொட்டிகளை வைக்க வேண்டும். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

பெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ள தொட்டிகளை விட நீள்வட்டம், செவ்வகம் போன்ற மற்ற வடிவ தொட்டிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.செம்மண் மற்றும் மணலுடன் குறைந்த அளவு எரு உரம் கிடைத்தால் போதுமானது.

மிகவும் மெதுவாக உரங்கள் செடியின் வளர்ச்சிக்குக் கிடைப்பதால் செடி மிக வேகமாக வளருவதைக் கட்டுப்படுத்தலாம்.

மாடித்தோட்டம் மாதுளை பயிரிடும் முறை:

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை செடிகளை தொட்டியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். செம்பு, அலுமினிய கம்பிகளை கிளைகள் மீது சுற்ற வேண்டும். இதன் மூலம் அதன் வளர்ச்சியை தடுக்கலாம்.

6 முதல் 8 மாதங்கள் வரை இக்கம்பிகளை நீக்கக் கூடாது. அதன்பின் கம்பிகளை நீக்கும் பொழுது கம்பிகளின் வடிவத்திற்கேற்ப கிளைகள் வளைந்து காணப்படும்.

தேனீ வளர்ப்பு முறை – முழு விளக்கம்..!

நீர்நிர்வாகம்:

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை கன்றுகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

மாடித்தோட்டம் மாதுளைப்பழம் பயிரிடும் முறை பொறுத்தவரை தண்ணீர் அதிகளவில் ஊற்ற கூடாது. அவ்வப்பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும்.

மாதுளை சாகுபடி முறை – உரங்கள்:

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

இதற்கு உரங்கள் எதுவும் இடத் தேவையில்லை. தொட்டியில் நிரப்பும் அடியுரங்களே ஒரு வருடம் வரை போதுமானது.

பாதுகாப்பு முறை:

பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

நுனி கிளைகளை நீக்கி கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக பக்கக்கிளைகள் தோன்றும். நன்கு ஆரோக்கியமான கிளைகளை வளர அனுமதிக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து செடியினைத் தனியாக வெளியில் எடுக்க வேண்டும். அப்பொழுது வேறு உரத்தினை நிரப்ப வேண்டும். செடியில் வளர்ந்துள்ள அதிகப்படியான வேர்களை அகற்ற வேண்டும். ஆணி வேரின் வளர்ச்சியை குறைத்து, பக்க வேர்களின் வளர்ச்சியைத் தூண்டி விடவேண்டும். அதிகமாக வளர்ந்து தொட்டியின் ஓரங்கள் வரை சென்று சுருண்டு உள்ள அனைத்து வேர்களையும் வெட்டி விடலாம். அதன் மூலம் அதிகமாக வளர்ந்து, வேர்களே தொட்டியை உடைத்துவிடும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் வேர்கள் குறைவதால் செடியின் வளர்ச்சியும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

அதேபோல ஆண்டிற்கு ஒரு முறை நீண்டு வளரும் கிளைகளையும், இலைகளையும் தண்டுப்பகுதியில் வெட்டி விட வேண்டும். மரத்தின் அமைப்பு தெரியும் அளவிற்கு மட்டும் கிளைகளைப் பராமரிக்க வேண்டும். தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி, மரங்கள் மீது விழுமாறு வைக்க வேண்டும்.

மாதுளை சாகுபடி முறை – அறுவடை:

மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும்.

நன்றாக பராமரிக்கப்பட்ட போன்சாய் மரங்களை வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது வீட்டின் முன்புறம் உள்ள தோட்டப் பகுதிகளிலோ வரிசையாக வைத்து அலங்கரிக்கலாம். தொட்டிகளின் வண்ணமும் நன்கு எடுப்பாகத் தெரியும் வகையில் இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.

அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.