மாடித்தோட்டம் கீரை விவசாயம் – புளிச்ச கீரை சாகுபடி..!
அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் மாடித்தோட்டம் பகுதியில் கீரை விவசாயம் செய்வது எப்படி அதாவது புளிச்ச கீரை சாகுபடி செய்வது எப்படி என்று இப்போது நாம் காண்போம் வாங்க..!
மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..! |
மாடித்தோட்டம் கீரை விவசாயம்:-
புளிச்ச கீரை வளர்ப்பு – தொட்டிகள்:
மாடித்தோட்டம் புளிச்ச கீரை சாகுபடி பொறுத்தவரை பயிர் செய்வதற்கு தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மணல், ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதன் மூலம் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும்.
பைகளை பயன்படுத்துவதாக இருந்தால் அதன் அடியில் இரு துளைகள் அமைக்க வேண்டும். பைகளில் உரங்களை நிரப்பும் போது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.
புளிச்ச கீரை வளர்ப்பு – விதை நேர்த்தி:
விதைகளை குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும்.விதைகளை ஊன்றிய பின் காகித தாள்களை கொண்டு மூட வேண்டும். வெய்யில் அதிகமாக இருந்தால் விதை முளைக்கும் திறன் பாதிக்கப்படும். விதைகள் அனைத்தும் முளைத்த பின் காகிதத்தாள்களை நீக்கி விடவும்.
புளிச்ச கீரை வளர்ப்பு – நீர் மேலாண்மை:
விதை நட்டவுடன் ஒரு முறை பூவாளியை கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு முறை பூவாளியை கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |
உரங்கள்:
மாடித்தோட்டம் புளிச்ச கீரை சாகுபடி பொறுத்த வரை உரமாக, சமையலறை கழிவுகளை மக்கவைத்து உரமாக இடலாம். மேலும் மண்புழு உரத்தை அடியுரமாக விடுவதினால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
மேலும் ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
கீரை வளர்ப்பு குறிப்பு தமிழ் – பயிர் பாதுகாப்பு:
மாடித்தோட்டம் புளிச்ச கீரை சாகுபடி பொறுத்தவரை கீரைகள் வாடுவதை தவிர்க்க கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் நிழல் பாங்கான இடத்தில் மாற்றி வைக்கலாம்.
இதன் நுனி கிளைகளை கிள்ளி விட்டு பக்கக்கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும், உரமாகவும் செயல்படும்.
புளிச்ச கீரை வளர்ப்பு – அறுவடை:
மாடித்தோட்டம் புளிச்ச கீரை சாகுபடி கீரைகளை இதன் வேர்ப்பகுதியில் இருந்து 5 செ.மீ விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
இதன் செடிகள் முற்றிய பிறகு இதில் இருந்து விதைகளை சேகரித்துக் கொள்ளலாம்.
அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |