உருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம் தெரியுமா உங்களுக்கு..!

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்

உருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம் தெரியுமா உங்களுக்கு..!

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ் (Rose Plant Growing Tips in Tamil)

நகர்ப்புறங்களில் கிராமங்களைப் போன்று இட வசதியெல்லாம் பெரும்பாலும் இருக்காது. தொட்டிச் செடிகள் தான் வளர்க்க முடியும். அதில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அது கூட சரியாக செட் ஆகாது. ஆனால் வீட்டில் ஒரு ரோஜா செடி இருந்தால் அது கொத்து கொத்தாக ரோஜா பூத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு இப்போவே உங்க கிச்சனுக்குப் போங்க.

இதையும் படிக்கவும்  ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

 

ரெண்டு பெரிய சைஸ் உருளைக் கிழங்கு எடுத்துட்டு வாங்க. எதுக்குன்னு கேட்கறிங்களா? ரோஜா வளர்க்கத்தான். ஆமாங்க. தொட்டியோ, மண்ணோ தேவையில்லை.

வெறும் உருளைக் கிழங்குல ரோஜா செடியோட தண்டை வெட்டி வெச்சே செடி வளர்க்கலாம். ஒரு உருளைக் கிழங்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இடத்தில் சிறிய ஓட்டை போட வேண்டும்.

பின் ரோஜா குச்சியை நுனிப் பகுதியை கிராஸாக சீவி விட்டு அந்த உருளைக் கிழங்குக்குள் சொருகிவிடுங்கள். அதை அப்படியே துக்கி மண்ணிலோ அல்லது தொட்டிக்குள்ளோ வைத்து மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். பிறகு வழக்கம் போல தொட்டியில் நீர் விடுங்கள்.

மிக வேகமாகவும் செழித்தும் வளரும். நிறைய பூக்கள் பூக்கும். இதற்கு ரோஜா செடி தேவையில்லை. ரோஜாவை வெட்டிய குச்சிகள் மட்டும் இருந்தாலே போதும். அதிலேயே செடி வளர்த்துவிடலாம்.

இதையும் படிக்கவும்  ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ் (Rose Plant Growing Tips in Tamil) :

ரோஜா செடியை சரியான முறையில் பராமரித்தால் ரோஸ் செடி கொத்து கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்கும். ரோஸ் செடியை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. அனைவரது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர்களை வளர்க்க அனைவருக்கும் ஆர்வமுள்ளது. இருந்தாலும் அதை பற்றிய பராமரிப்பு முறைகளை பற்றி எவருக்கும் தெரிவதில்லை.

இதோ உங்களுக்காகவே ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ் (Rose Plant Growing Tips in Tamil):

ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை நாம் பார்த்திருக்கின்றோம். நம் வீட்டிலும் இப்படிப் பூத்துக் குலுங்காதா என்று நம்மில் பலர் ஏங்குவதுமுண்டு.

பொதுவாக ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் அழகுத் தாவரமாகவே வளர்க்கப்படுவதுண்டு. வீட்டு முற்றம் இல்லாதவர்கள் தொட்டி தாவரமாக இதனை வளர்ப்பர்.

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்: 1

ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல் இலேசாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. காற்றோட்டம் இருப்பது அவசியம். இந்த ரோஜா செடிகள் நன்கு நீரை உறிஞ்சும் மண்ணிலும், போதுமான சூரிய வெளிச்சத்திலும் வளரும்.

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்: 2

வீட்டில் காய்கறி, இலைக் கழிவுகளை உரமாகப் பாவிக்கலாம்.

இவை தவிர கடலைப் புண்ணாக்கு, தண்ணீரில் ஊறவைத்து கரைத்து ஊற்றினால் பூக்கள் பெரிதாகப் பூக்கும் என்று கூறுவார்கள்.

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்: 3

அதே போன்று எறும்பு மற்றும் பூச்சித் தொல்லைகளைத் தவிர்க்க வேப்பம் புண்ணாக்கு (இதுவும் மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்) பெரிதும் உதவும் என்று கூறுவர்.

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்: 4

ரோஜா செடி செழிப்பாக வளர நீர்த் தேங்கி நிற்காமல் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. ஆண்டுக்கு ஒரு முறை செடியின் மூன்றில் ஒரு பகுதியை வெட்டி விடலாம்.

ரோஸ் செடி பராமரிப்பு டிப்ஸ்: 5

ரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கவும் 

ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..!

ஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com