மாடித்தோட்டம் புதினா செடி வளர்ப்பு முறை..! Pudina valarpu in tamil..!

Pudina valarpu in tamil

மாடித்தோட்டம் புதினா செடி வளர்ப்பு முறை..! How to plant pudina at home..!

புதினா செடி வளர்ப்பு / Pudina valarpu in tamil:- அதிக நறுமணம் நிறைந்த கீரை தான் புதினா, இந்த புதினா செடியினை கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மிக எளிதாக வளர்த்து விடலாம். புதினா சைவ மற்றும் அசைவ உணவுகளில் அதிகம் பயன்படக்கூடிய ஒரு தாவரமாகும். இவற்றில் செய்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது ஒரு வாசனை நிறைந்த ஒரு தாவரம் என்பதால் பிரியாணியில் அதிகம் பயன்படுத்துவார்கள்.

சரி இந்த புதினாவை மிக எளிமையான முறையில் மாடித்தோட்டத்தில் எப்படி வளர்க்கலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கொத்தமல்லி சாகுபடி செய்து 45 நாளில் 30 ஆயிரம் வரை லாபம்…

மாடித்தோட்டத்தில் புதினா செடி வளர்ப்பு முறை / Pudina valarpu in tamil:

தேவைப்படும் பொருட்கள்:

புதினா செடிகளை வளர்ப்பதற்கு ஒரு அகலமான தொட்டி, மண்புழு உரம் மற்றும் மண் கலந்த கலவை, புதினாவின் இலை பகுதியை நீக்கிய தண்டு, தண்ணீர் தெளிப்பதற்கு பூவாளி ஆகியவை இந்த புதினா வளர்ப்புக்கு தேவைப்படும் பொருட்களாகும்.

மாடித்தோட்டத்தில் செடிகளை வளர்க்கும் முறை:-

ஒரு மண்தொட்டியில் மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை நிரப்பி அவற்றில் முற்றிய புதினா கீரையின் தண்டு பகுதியை 2 அங்குலம் அளவிற்கு நடவேண்டும்.

பின் தண்ணீர் தெளித்து விட வேண்டும். இவ்வாறு நடவு செய்த பின் சரியான நிழலும், சூரிய ஒளியும் தண்ணீரும் புதினா செடிக்கு கிடைக்கும் பட்சத்தில் மூன்று வர காலத்தில் புதினா செடி நன்கு வளர்ந்து நிற்கும்.

புதினா செடியில் பூக்கள் பூப்பதற்குள் அறுவடை செய்துவிட வேண்டும். இல்லையெனில் இலைகள் பழுத்து உதிர்ந்து கொட்டிவிடும்.

பராமரிப்பு முறை:

புதினா செடி வளர்ப்பு (pudina valarpu in tamil) பொறுத்தவரை பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள் இருக்காது.

எனவே தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து விட வேண்டும். அதன்பிறகு அவற்றில் முளைத்திருக்கும் களைகளை அகற்றிவிட வேண்டும்.

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!

குறிப்பு:

தொட்டியில் வளர்ந்த புதினா செடிகளை, முழுமையாக தொட்டியில் இருந்து பிடிங்கி அறுவடை செய்யாமல், சிறிது தண்டுகளை விட்டுவிட்டு கட் செய்து அறுவடை செய்தால் மீண்டும் அவற்றில் தளிர்கள் விட ஆரம்பிக்கும்.

இதன் மூலம் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வரை புதினா வளர்க்கலாம்.

அதன் பிறகு புதிதாக தண்டுகளை நட்டு மீண்டும் புதினா செடிகளை வளர்க்க வேண்டும்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil