மாடி தோட்ட செடிகளை பராமரிக்கும் முறை..!
மாடி தோட்டம் டிப்ஸ் (maadi thottam) மாடித்தோட்டத்தை வைப்பது ஒன்று பெரிய விஷயம் இல்லை அவற்றை சரியான முறையில் பராமரிப்பதுதான் மிக பெரிய விஷயம்.
அந்த வகையில் மாடி தோட்டம் (maadi thottam) செடிகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் காண்போம் வாங்க…!
மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..! |
மாடி தோட்டம் டிப்ஸ் – செடி தொட்டியில் எறும்புகள் இருக்க… அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்:-
மாடி தோட்டம் செடி தொட்டிகளில் நிறைய எறும்புகள் இருக்கின்றதா? எறும்புகள் செடியின் வளர்ச்சியை அழித்துவிடும். குறிப்பாக சரியாக செடியில் பூக்கள் பூக்காது, சரியாக காய்கள் காய்க்காது.
எனவே செடி தொட்டியில் இருக்கு எறும்புகளை விரட்ட ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் பட்டை தூள் இரண்டையும் ஒன்றாக கலந்து. செடியின் வேர் பகுதியில் தூவிவிடுங்கள். இவற்றின் வாசனையால் எறும்புகள் அனைத்தும் பயந்தோடிவிடும்.
மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்..! |
மாடி தோட்டம் டிப்ஸ் – செடிகள் செழித்து வளர நுண்ணுயிர் பாகாடீரியாவை பயன்படுத்தும் முறை:
மாடித்தோட்டம் (maadi thottam) பூ செடிகள் மற்றும் காய்கறிகள் நன்கு செழிப்பாக வளர நுண்ணுயிர் பாகாடீரியாக்கள் மிகவும் பயன்படுகிறது.
எனவே இரண்டு ஸ்பூன் ட்ரைக்கோ டெர்மா விரிடி மற்றும் இரண்டு ஸ்பூன் சூடோமோனஸ் ஆகியவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பானை பயன்படுத்தி செடிகள் மீது தண்ணீர் படும்படி தெளிக்கவும்.
இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வர செடிகள் செழிப்பாக வளரும்.
மாடி தோட்டம் டிப்ஸ் – செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறதா அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்:-
உங்கள் விட்டு மாடி தோட்டம் (maadi thottam) செடிகள் மஞ்சள் மாறி உதிர்ந்து கொட்டுகிறதா? கவலை விடுங்கள் செடிக்கு தழைச்சத்து பற்ற குறையாக இருக்கும்.
செடி முழுமையாக தழை சத்தினை பெற மீன் அமிலத்தை 25 மில்லி எடுத்து கொள்ளுங்கள், அவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் இலைகள் மீது படுமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கின்றது. செடிகள் வளமாக வளர வழிவகுக்கின்றது.
மாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம் |