மாடித்தோட்டத்தில் முட்டைகோஸை சுலபமாக பயிரிடும் முறை

muttaikose valarpathu eppadi

முட்டைகோஸ் மாடித்தோட்டம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் விவசாய பதிவில் மாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் வளர்ப்பது பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். பொதுவாகவே நாம் சாப்பிடும் எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் அதை நம் வீட்டில் மாடிலேயே வளர்க்கலாம். இது போல் நம் வீட்டில்  இயற்கையாக காய்க்ககூடிய காய்கறிகளை சாப்பிடுவதினால் உடல் நலத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. மேலும் நம் வீட்டில் உள்ள மாடியில் முட்டைகோஸை எப்படி பயிரிடுவது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?

முட்டைகோஸ் பயிரிட தேவையான பொருட்கள்:

  • தொட்டி அல்லது  Grow பேக்ஸ் 
  • அந்த தொட்டியின் அடிபகுதியில் தென்னை நாரின் கழிவுகள் மங்கியது.
  • மண்புழு உரம்.
  • செம்மண்.
  • வேப்பம் பிண்ணாக்கு
  • பஞ்சகாவியா.
  • நாற்றுகளை உருவாக்குவதற்கு குழித்தட்டுகள்.
  • நீர் தெளிக்கும் பூவாளி தெளிப்பான். 

முட்டைகோஸ் பயிரிடும் முறை:

முதலில் பத்து கிலோ கொள்ளளவு கொண்ட பை அல்லது தொட்டிகளில் எட்டு கிலோ வரை மண், தொன்னை நார் கழிவுகள், மட்கிய குப்பை போன்றவற்றை அந்த பைகளுக்கு நிரப்பி விட வேண்டும்.

நாற்றுகளை உண்டாக்குவதற்கு ஒரு குழியுள்ள தட்டில் தென்னை நார் கழிவுகளை முழுவதுமாக நிரப்ப வேண்டும். அதன் அடிபகுதியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

அடுத்ததாக நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து அந்த குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் தயார் செய்து வைத்த தொட்டியில் 20 நாட்கள் கழித்து நாற்றுகளை நட வேண்டும்.

முட்டைகோஸ் வளர்ப்பது எப்படி.?

முட்டைகோஸை நாற்று நட்டவுடன் நீர் ஊற்றுவது அவசியம். மற்ற நேரங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதாவது காலை அல்லது மாலை நேரங்களில் நீர் ஊற்றி வருவது நல்லது.

முட்டைகோஸ் செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுக்காப்பாக வைப்பதற்கு மாதத்தில் ஒரு முறை வேப்பம் எண்ணெயை அந்த செடிகளில் தெளிக்க வேண்டும்.

வேப்பமரத்தில் உள்ள இலைகளை காயவைத்து அதை தூளாக செய்து, அந்த தூள்களை ஒவ்வொரு செடியின் இடையிலும் ஒரு கைப்பிடி அளவு அந்த வேர்களில் வைக்க வேண்டும்.  இந்த உரமே இதற்கு அடிஉரமாகவும், பூச்சி கொல்லியாகவும் இருப்பதற்கு உதவியாக இருக்கிறது.

முட்டைகோஸ் செடியை பாதுக்காக்கும் முறை:

முட்டைகோஸ் பாதுகாப்பாக  இருப்பதற்கும், அவை நன்றாக வளர்வதற்கும் பஞ்சகாவிய உரத்தை அந்த செடியின் மேல் பகுதியில் உரமாக தெளிக்கலாம். பிறகு நம் சமையலறை கழிவுகளையும் உரமாக முட்டைகோஸ் செடிகளில் போடலாம்.

மேலும் கற்றாழை சாறு, பூண்டு போன்றவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்து கொண்டு அதை அந்த செடிகளின் வேர்பகுதிகளில் ஊற்றலாம்.

முட்டைகோஸ் செடிகள் வளர்ந்த பிறகு 120 நாட்கள் கழித்த பிறகு அறுவடை செய்து ஆரோக்கியமான முட்டைகோஸை சாப்பிடலாம். இதனுடைய விளைச்சல் அதிகமாக இருக்கும் பொழுது அதை காய்கறி கடை, சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்து அதிகமான லாபத்தையும் பெறலாம்.

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Pasumai Vivasayam in Tamil