ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

ரோஜா செடி நன்கு வளர

ரோஜா செடி வளர்ப்பு முறைகள் / rose plant growing tips in tamil

Rose Plant Growing Tips in Tamil

Rose plant care in tamil:- ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ் – வீட்டில் செடிகள் வளர்ப்பதற்கு ஆசைப்படுவர்களின் தேர்வு பட்டியலில் நிச்சயம் ரோஜா செடிகளுக்கு இடம் உண்டு. எத்தனை வகையான அலங்கார செடிகள் வளர்த்தாலும் ரோஜா செடிகள்தான் முதலிடம் பெறும்.

ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..! Rose Plant Care in Tamil..!

 

இருப்பினும் ரோஜா செடிகளை தோட்டத்தில் வைத்து வளர்த்தாலும் அந்த செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ரோஜா செடிகளுக்கு சரியான பராமரிப்பு இருந்தால் தான் பூக்கள் தொடர்ச்சியாக பூத்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கவும்  ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

சரி வாங்க ரோஜா செடி வளர்ப்பு (rose plant growing tips in tamil) முறைகள் சில டிப்ஸ் சொல்றேன் வாங்க..!

ரோஜா செடி வளர்ப்பு | Rose Plant (ரோஜா பூக்கள்) Growing Tips in Tamil

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ் 1:

ரோஜா செடிகளை தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால் நர்சரியில் வாங்கி வரும் செடியை அப்படியே தொட்டிக்குள் வைத்து மண்ணை நிரப்பி  விடக்கூடாது.

எந்த வகையான மண்ணை தாங்கி செடி வளர்ந்திருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் :2

அவை சத்தான மண்தானா? ரோஜா செடிகள் வளர்வதற்கு ஏற்ற வகையில் மண் கலவை அமைந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே மண் கலவை கிடைத்தால் அதனையே தொட்டிக்குள் நிரப்பி அதனுள் செடியை நட்டு வைத்து வளர்க்கலாம்.

Roja Sedi Valarpu Tips in Tamil: 3

பொதுவாக ரோஜா செடிகள் வளர்ப்பதற்கு செம்மண் கலவை சிறந்த தேர்வாக இருக்கும். அக்கலவையுடன் இயற்கை உரத்தையும் கலக்க வேண்டும். பின்னர் அதனை தொட்டிக்குள் நிரப்பி அதனுள் ரோஜா செடியை நடவு செய்ய வேண்டும்.

அதற்கு முன்பு செடியின் வேர்களை சூழ்ந்திருக்கும் மண்ணை நன்றாக சுத்தம் செய்தால் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் நன்றாக வளர்ச்சி அடைவதற்கும் ஏதுவாக அமையும்.

அதுபோல் தொட்டியில் பாதி மண் கலவையை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்றிவிட்டு, பின்பு தண்ணீர் நன்கு உறிஞ்சப்பட்ட பிறகு மண், இயற்கை எரு கலவையை நிரப்புவது சிறந்தது. ஏனெனில் தொட்டியில் மண், இயற்கை எரு கலவையை அடுத்தடுத்து நிரப்புவது செடியின் வளர்ச்சிக்கு துணை புரியும்.

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 4:

நாட்டு ரோஸ் தவிர மற்ற ரோஸ் செடிகளை மண் தரையில் வைப்பதை விட தொட்டிகளில் வைத்து வளர்ப்பதே சிறந்த முறையாகும் இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்றாக வளரும், அதிக தளிர்கள் விடும், அதிக தளிர்கள் விடுவதினால் பூக்களும் அதிகமாக பூக்கும்.

இதையும் படிக்கவும்  ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..!

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 5:

ரோஸ் செடியில் பூக்கள் பூக்கும் போது, பூக்களை பறித்து விடுவது மிகவும் சிறந்தது, சிலபேர் ரோஸ் செடியில் பூக்கள் பூத்த பிறகு அவற்றை பறிக்க மாட்டார்கள், அந்த பூக்கள் பூத்து உதிர்ந்து விடும், அந்த பூக்கள் உதிர்ந்த பிறகு உடனே நறுக்கி விட வேண்டும். இலைனெனில், செடிகளில் தளிர்கள் விடுவதை பாதிக்கும்.

இதனால் சில நேரங்களில் செடிகள் கருவும் வாய்ப்புகளும் உள்ளது.

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 6:

ரோஸ் செடியில் சில சமயங்களில் இலைகள் மஞ்சள் நிறத்தை மாறிவிடும் அந்த சமயங்களில் இலைகளை நறுக்கிவிடுவது மிகவும் நல்லது.

இல்லையெனில் செடிகள் பட்டுபோவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இலைகள் கரிகினாலோ அல்லது மஞ்சள் நிறத்தில் மாறினாலோ இலைகளை நறுக்கிவிடுவது மிகவும் நல்லது. இதனால் செடிகள் ஆரோக்கியமாக வளரும்.

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 7:

ரோஸ் செடிகளை பொறுத்தவரை உயரமாக வளர்ப்பதை தடுக்க வேண்டும். ரோஸ் செடி உயரமாக வளர்ந்தால் அப்பறம் பூக்கள் அதிகமாக பூக்காது, எனவே ரோஸ் செடிகளை உயரமாக வளர விடாமல் கிளைகளை நறுக்கிவிடுவது மிகவும் அவசியம்.

இவ்வாறு கிளைகளை நறுக்கி விடுவதினால், ரோஸ் செடியில் தளிர்கள் அதிகளவு விடும். இதனால் அதிக பூக்களும் பூக்கும்.

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 8:

ரோஜா செடிகள் பூச்சிகளின் பாதிப்புக்கு உட்படாமல் இருக்க இயற்கை பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து வர வேண்டும்.

அதாவது வேப்ப பிண்ணாக்கை தண்ணீரில் கலந்து செடிகளின் மீதோ அல்லது செடியின் வேர் பகுதியிலோ தெளித்து விடவும். இந்த முறையை வாரத்துக்கு ஒரு முறை செய்து வர வேண்டும்.

இவ்வாறு செய்வதனால், ரோஜா செடிகளை எந்த ஒரு நோய்களும் தாக்காது. செடிகள் நல்ல ஆரோக்கியமாக வளரும்.

ரோஜா செடி நன்கு வளர டிப்ஸ் 9:

மற்ற செடிகளை போல் ரோஜா செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கட்டாயமில்லை.

மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு தான் தண்ணீர் விட வேண்டும்.

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டிப்ஸ் 10:

ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். தினமும் 6 மணி நேரமாவது செடியில் சூரிய ஒளி படும்படி பார்த்து கொள்வது நல்லது.

செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டியது அவசியம்.

செடிகள் ஓரளவு வளர தொடங்கியதும், தொட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கவும்  ஒரே ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்க வேண்டுமா?

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்