சிறுகுறிஞ்சான் மாடித்தோட்டத்தில் எப்படி பயிரிடுவது..?

sirukurinjan

மாடி தோட்டத்தில் – சிறுகுறிஞ்சான் செடி பயிரிடலாம் வாருங்கள்..!

சிறுகுறிஞ்சான் செடி: சர்க்கரை கொல்லி செடி (sirukurinjan) சர்க்கரைக்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். இவை இனிப்பு உண்ண வேண்டும் என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது. இவை பரவலாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மலேஷியாவில் வளர்கிறது. இவை இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீஹார் காடுகளில் பரவலாக காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

சரி இப்போது நாம் சிறுகுறிஞ்சான் செடி (sirukurinjan) மாடி தோட்டத்தில் எப்படி சாகுபடி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெளிவாக படிப்போம் வாருங்கள்..!

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

தொட்டி:

சர்க்கரை கொல்லி செடி (sirukurinjan) வளர்வதற்கு தொட்டி சற்று அகலமானதாக இருந்தால் நல்லது.

சர்க்கரை கொல்லி செடி (sirukurinjan) வளர்ப்பதற்காக பைகளில் மண் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.

இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பை மேற்கொள்ள வேண்டும்.

விதைகள்:

விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும்.

அதேபோல் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும்.

விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.

பைகளில் நேரடையாகவே துண்டுச் செடிகளை நடவு செய்யலாம். தொட்டியின் அளவைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை:

நாற்றுகள் நட்டவுடன் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பின் தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் தெளிக்கலாம்.

உர மேலாண்மை:

சிறுகுறிஞ்சான் செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

சமையலறை கழிவுகளை மட்கச்செய்து உரமாக போடலாம்.

மாதம் ஒருமுறை மண்புழு உரம் இட வேண்டும். இயற்கை உரங்களை இடுவதால் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!

பாதுகாப்பு முறை:

சிறுகுறிஞ்சான் செடி (sirukurinjan) பாதுகாப்பு முறை பொறுத்தவரை வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் சிறுகுறிஞ்சான் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம், சிறுகுறிஞ்சான் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

அறுவடை:

சிறுகுறிஞ்சான் செடி நீண்ட நாள் தாவரம் என்பதால், தங்களுக்கு தேவைப்படும் போது செடியில் இருந்து பறித்து பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறுகுறிஞ்சான் மருத்துவ பயன்கள் / sirukurinjan powder benefits:-

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 1

வாரம் இருமுறை சர்க்கரை கொல்லி கீரையை (sirukurinjan) உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 2

உடல் மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இந்த சர்க்கரை கொல்லி செடி  இலையை (sirukurinjan) அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும்.

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 3

எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் சிறுகுறிஞ்சான் கீரையை (sirukurinjan) கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 4

sirukurinjan powder benefits:- சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 5

sirukurinjan powder benefits:- இந்த சர்க்கரை கொல்லி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்குதல் இருக்காது.

சிறுகுறிஞ்சான்(sirukurinjan) மருத்துவ பயன்கள்: 6

சிறுகுறிஞ்சான் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

 

மாடித்தோட்டம் வைக்க போறிங்களா இந்த 5 தவறு செய்யாதீங்க..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil