வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி மற்றும் பயன்கள் !!!

Updated On: February 22, 2022 11:58 AM
Follow Us:
உருளை கிழங்கு சாகுபடி
---Advertisement---
Advertisement

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி மற்றும் பயன்கள் !!!

உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைச்சிட்டிங்களா அப்படினா இந்த வாரம் உங்கள் மாடி தோட்டத்தில் உருளை கிழங்கு சாகுபடி செய்வது எப்படி என்றும், பராமரிக்கும் முறையும் அவற்றின் பயன்களையும் இவற்றில் காண்போம் வாங்க.

மாடித் தோட்டம் – கொத்தமல்லி சாகுபடி முறை மற்றும் பயன்கள்..!

மாடித்தோட்டம் – உருளை கிழங்கு சாகுபடி :-

உருளைக்கிழங்கு பயிரிடும் முறை தேவைப்படும் பொருட்கள்:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி பொறுத்தவரை Grow Bags அல்லது தொட்டி, அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, பூவாளி தெளிப்பான், பசுமைக்குடில் அமைப்பதற்கான உபகரணங்கள்.

மண் கலவை:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி (urulaikilangu valarpathu eppadi) பொறுத்தவரை அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்கு எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு பயிரிடும் முறை :-

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி முறையில் உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது.

நீர் தெளிக்க வேண்டும்:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி (urulaikilangu valarpathu eppadi) முறையில் விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பின்பு தண்ணீர் தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும். அதாவது ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.

அதிகமாக தண்ணீர் இருந்தால் பைகளின் அடிப்பகுதியில் இரு துளைகள் இட வேண்டும்.

உரமிடுதல்:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி (urulaikilangu valarpathu eppadi) முறையில் சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!

பசுமைக்குடில் அமைத்தல்:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி (urulaikilangu valarpathu eppadi) முறையில் பசுமை குடில்கள் அமைப்பதற்கு வரிசையாக நீளக்கம்பிகளை இருபுறமும் வளைத்து அதன்மேல் பாலிதீன் பைகளை இணைத்து கட்ட வேண்டும்.

அதனை திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

பசுமைக்குடில் அமைப்பதற்கான பிரத்தியேக சாதனங்களை கொண்டும் பசுமை குடில்களை நிறுவி விடலாம்.

இக்குடிலுக்கு சீதோஷண நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால் பருவகால மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது இல்லை.

செடிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான பூச்சிகளின் ஆதிக்கம் பசுமைக் குடிலுக்குள் காணப்படுவதில்லை.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.

அறுவடை:

மாடித்தோட்டம் உருளை கிழங்கு சாகுபடி முறையில் இக்கிழங்கினை விதைத்த 120 நாட்களில் அறுவடை செய்யலாம்.

உருளைக்கிழங்கு பயிரிடும் முறை பற்றி இதுவரை பார்த்தும் இப்போது உருளை கிழங்கு பயன்கள் சிலவற்றை படித்தறிவோம் வாங்க..!

பயன்கள்:-

உருளை கிழங்கு பயன்கள் :1

உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

உருளை கிழங்கு பயன்கள் :2

காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

உருளை கிழங்கு பயன்கள் :3

உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

உருளை கிழங்கு பயன்கள் :4

தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.

உருளை கிழங்கு பயன்கள் :5

கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.

உருளை கிழங்கு பயன்கள் :6

முகம் புத்துணர்ச்சியாக இருக்க பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் இரவில் தேய்த்து பின்பு அதிகாலை எழும் போது முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் புத்துணர்வுடன் காணப்படும்.

உருளை கிழங்கு பயன்கள் :7

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மீது உருளை கிழங்கை அரைத்து பூசி வர கரும்புள்ளிகள் மறையும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now