முல்லை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்..!

Advertisement

முல்லை சாகுபடி முறை..!

முல்லை சாகுபடி இரகங்கள்:

முல்லையில் ஆம்பூர் முல்லை, ஆற்காடு முல்லை, பச்சை முல்லை, குட்டை கூர்முனை, குட்டை வட்டமுனை, நடுத்தர கூர்முனை, நீண்ட கூர்முனை, நீண்ட வட்ட முனை என உள்ளூர் வகைகள் பல உள்ளன. அதை தவிர பாரிமுனை, கோ 1, கோ 2 இரகங்களும் உள்ளன.

முல்லை சாகுபடி பருவ காலம்:

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.

முல்லை சாகுபடி முறைக்கு ஏற்ற மண்:

செம்மண், களிமண், கரிசல்மண் ஆகியவை ஊசிமல்லி சாகுபடிக்கு ஏற்றவை.

முல்லை சாகுபடி நிலம் நிர்வாகம்:

நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை தயார் செய்ய வேண்டும். பின்பு குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து ஆற விடவேண்டும்.

இதையும் படியுங்கள்–> விவசாயம் – கனகாம்பரம் செடி வளர்ப்பது எப்படி மற்றும் பயன்கள்..!

முல்லை சாகுபடி விதைநேர்த்தி:

10 லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகாவ்யா கலந்து 8 மாத வயது கொண்ட முல்லைப் பதியன்களை அக்கரைசலில் நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

முல்லை சாகுபடி விதை விதைத்தல்:

வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் குழியின் மையப்பகுதியில் விதைநேர்த்தி செய்த பதியன்களை நடவு செய்ய வேண்டும்.

முல்லை சாகுபடி உயிர் தண்ணீர்:

நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் நாளில் புதுத்துளிர் வளர ஆரம்பிக்கும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

முல்லை சாகுபடி உரங்கள்:

இயற்கை உரமிடல் முறையில் 60-ம் நாளில் ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ கோழி எரு வைத்து, கிளறிவிட வேண்டும்.

20-ம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு ஒரு முறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யா, தலா 10 மில்லி வீதம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும்.

செயற்கை உரமிடல் முறையில் செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்–>அதிக லாபம் தரும் வாடாமல்லி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள் !!!

முல்லை சாகுபடி பயிர் பாதுகாப்பு முறை:

களை எடுக்க வேண்டும்:

20 நாட்களுக்குப் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை களைகளை அகற்ற வேண்டும். செடிகள் வளர்ந்து நிழல் கட்டிக்கொண்டால் களை தோன்றாது.

ஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து  45 செ.மீ உயரத்தில் வெட்டிவிட்டு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.

சிவப்பு சிலந்தி பூச்சிக்கு:

சிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

பூ மொட்டு புழு:

பூ மொட்டு புழுவை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

மகசூல்:

ஒரு ஏக்கருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் வரை மகசூல் கிடைக்கும்.

முல்லை பூ பயன்கள் :1

மு‌ல்லை மலரை தலை‌யி‌ல் சூடி‌க் கொ‌ண்டு, அத‌ன் மண‌த்தை முக‌ர்‌ந்தாலே மனோ ‌வியா‌திக‌ள் ‌நீ‌ங்‌கி மன‌த்தெ‌ளிவு உ‌ண்டாகு‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

முல்லை பூ பயன்கள் :2

மு‌ல்லை‌ப் பூ சாறு ‌பி‌ழி‌ந்து, 3 து‌ளி மூ‌க்‌கி‌ல் ‌விட தலைவ‌லி ‌தீரு‌ம்.

மு‌ல்லை‌ப் பூ‌‌வி‌ன் சா‌ற்‌றினை 2 அ‌ல்லது 4 து‌ளி ‌வீத‌ம் க‌ண்‌ணி‌ல் ‌வி‌ட்டு வர க‌ண் பா‌ர்வை குறைவு குணமாகு‌ம்.

முல்லை பூ பயன்கள் :3

மு‌ல்லை‌ப்பூ அரை‌த்து அ‌ல்லது அ‌ப்படியே வை‌த்து மா‌ர்‌பி‌ல் க‌ட்டி வர தா‌ய்‌ப்பா‌ல் சுர‌ப்பு குறையு‌ம்.

முல்லை பூ பயன்கள் :4

ஒரு கை‌ப்‌பிடி அளவு மு‌ல்லை‌ப் பூவை ‌நீ‌ர் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி பா‌தியாக ‌வ‌ற்‌றியது‌ம் 15 ‌மி‌ல்‌லி அளவு குடி‌‌த்து வர மாத‌விடா‌ய் கோளாறுக‌ள் குணமாகு‌ம்.

இதையும் படியுங்கள்–> அதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி!!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement