வாழையில் இவ்வளவு வருமானமா? பயிரிடும் முறை விளக்கத்துடன்.

banana cultivation in tamil

வாழை சாகுபடி முறை..! வாழை சாகுபடி இயற்கை விவசாயம்

சந்தையில் எப்போதும் தேவையுள்ள பழங்களில் ஒன்று வாழைபழம். வாழையில் பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தம், பூவம் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாழை சாகுபடி முறையில் இலை, பூ, தண்டு, காய், பழம் மற்றும் நார் என்று அனைத்துமே சந்தையில் எப்போதும் தேவையுள்ள ஒன்றாக விளங்குகிறது. மேலும் சந்தையில் அதிக வருமானம் அளிக்கக்கூடிய ஒரு வளமான சாகுபடியாக திகழ்கிறது. மேலும் அனைத்து விசேஷங்களுக்கும் இலை, காய் மற்றும் பழம் அதிகமாக பயன்படுகிறது. மற்றும் பூ சந்தையில் அதிகமாக வாழை நார் பயன்படுகிறது. ஆகையால் வாழை சாகுபடியில் அதிக வருமானம் பெறலாம்.  சரி வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பற்றி நாம் இங்கு காண்போம்.

தர்பூசணி சாகுபடி முறைகள் – தர்பூசணி விவசாயம்..!

வாழை சாகுபடி முறை (Banana Cultivation In Tamil) :

இரகங்கள் மற்றும் இடைவெளி விவரங்கள்:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை ஒரு ஏக்கர் தோட்டக்கலை நிலத்திற்கு ரோபாஸ்டா, நேந்திரன் 1.8 x 1.8 மீ

குள்ளவாழை 1.5 x 1.5 மீ

நஞ்சை நிலம் பூவம்பழம், மொந்தம், ரஸ்தாளி 2.1 x 2.1 மீ

மலை பகுதி சாகுபடிக்கு 3.6 x 3.6 மீ இடைவெளி தேவை.

பருவ காலம்:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு பருவக்காலம், செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஒரு பருவக்காலம் மற்றும் டிசம்பர் முதல் ஜனவரி வரை ஒரு பருவக்காலம். இவற்றில் ஜூன் மாதம் நடவு செய்தால் வாழை நன்கு வேகமாக வளரும்.

மண் வகை:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், சாகுபடிக்கு உகந்தது. கார அமிலம் உள்ள மண்ணில் வாழை நன்கு வளரும். உப்பு மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலம் தயாரிப்பு:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை இவற்றிற்கு எந்த நடவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணை பறித்து அதன் மேல் கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை பக்கக்கன்றுகளை முதலில் நடவு செய்யவும். வேர்களில் அழுகிய பகுதியை வெட்டி சரி செய்யவும்.

ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி இரகங்களில் வாடல் நோயைத் தவிர்க்க, தாக்கிய வேர்கிழங்கை வெட்டி, 0.1% எமிசான் கரைசலில் (1 லிட்டர் நீரில் 1 கிராம்) 5 நிமிடங்களுக்கு நனைத்து எடுக்க வேண்டும்.

5-6 இலைகளை உடைய திசு வளர்ப்பு வாழையைப் பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்:

வாழை சாகுபடி (banana cultivation in tamil) முறையில் 4 விதமான நடவு முறைகள் உள்ளது:

 • ஒற்றை வரிசை வாழை சாகுபடி முறை
 • இரட்டை வரிசை வாழை சாகுபடி முறை
 • சதுர வாழை சாகுபடி முறை
 • முக்கோணம் வடிவ வாழை சாகுபடி முறை

நடவு செய்தல்:

 • குழியில் ஊன்றும் முறை
 • சால் முறை
 • அகழி நடவு முறை
 • அடர் நடவு முறை

நீர் நிர்வாகம்:

நடவு செய்த 4 வது மாதம் முதல் சொட்டு நீர் பாசனம் வழியாக ஒரு நாளுக்கு 15 லிட்டர் என்று ஒரு மாதம் வரை நீர் பாசனம் இட வேண்டும்.
அதன் பிறகு 5 வது மாதத்தில் தார் வெளிவரும் நேரம் அந்த தருணத்தில் 20 லிட்டர் தண்ணீரும். அதற்கு பிறகு அறுவடை வரை தினமும் 25 லிட்டர் தண்ணீர் சாகுபடிக்கு தேவையானவை.

வாழை சாகுபடி முறைக்கு ஏற்ற உரங்கள்:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை அரை வட்ட வடிவ பாத்தியை மரத்திற்குக் கீழே அதாவது மரத்தைச் சுற்றி அமைக்க வேண்டும். அதில் 315 கிராம் (40:30:40) தழை, சாம்பல் சத்தைக் கலந்து இட வேண்டும்.

பின் 130 கிராம் மியூரோட் சாம்பல் சத்தை அக்டோபர், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இட வேண்டும். அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை 20 கி/மரம் என்ற அளவிற்கு 2-வது மற்றும் 4வது மாதத்தில் அனைத்து இரகத்திற்கும் இட வேண்டும்.

ஊட்டச்சத்து வழங்கும் ஜீவாமிர்தம்:

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை:

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

பயன்படுத்தும் முறை:

ஜீவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.

வாழை பாதுகாப்பு முறைகள்:

 • இடைக்கன்றினை நீக்குதல்
 • முட்டு கொடுத்தல்
 • மூடாக்கு போடுதல்
 • குழையை மூடுதல்
 • சீப்பு நீக்குதல்
 • கொண்ணை உரித்தல்
 • காற்று தடுப்பான்
 • பயிர் பரப்பு மற்றும் ஒளி குறுக்கீடு
 • பயிரின் உயரம் மற்றும் தடிமன்
 • பூத்தல் மற்றும் முதிர்ச்சி அடைதல்
 • குழை எடை மற்றும் தரம்
  ஆகிய பாதுகாப்பு முறைகளை செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

கிழங்கு வண்டு தாக்குதல், அசுவினி பூச்சி தாக்குதல், சாற்றுண்ணிகள்,கண்ணாடி இறக்கை பூச்சிகள், நூற்புழுக்கள் தாக்குதல், தண்டுத்துளைக்கும் வண்டுகள் மற்றும் சிகடோக்கா இலைப்புள்ளி நோய்கள் ஆகியவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

அறுவடை:

நடவு செய்த 12 முதல் 15 மாதத்தில் இருந்து அறுவடைக்கு தயாராகிவிடும். மண் இரகங்களை பொறுத்து பூ பூத்த 90 – 150 நாட்களில் தார்களை அறுவடை செய்யலாம்.

மகசூல்:

வாழை சாகுபடி முறை (banana cultivation in tamil) பொறுத்தவரை ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு வருடத்திற்கு அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் இரகங்களை பொறுத்து மகசூல் மாறுபடும்.

அழகு + ஆரோக்கியம் + வருமானம் = சோற்றுக் கற்றாழை சாகுபடி ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.